Advertisement

நமக்கு நாமே, 'ஆப்பு!'

Share

'ஆர்வக் கோளாறில் வாயை கொடுத்து, வம்பில் மாட்டி விட்டோமே' எனக் கதறுகிறார், தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமாராவ். இவர், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகன். தனக்குப் பின், கட்சியை வழி நடத்துவதற்காக, தன் மகனை, இப்போதே தயார் செய்து வருகிறார் சந்திரசேகர ராவ். மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக, தீவிரமாக பணியாற்றி வரும் ராமா ராவ், அரசியல் தந்திரங்கள், மக்களின் அபிமானத்தை பெறுவது ஆகியவை குறித்து, அரசியல் விமர்சகர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்.

இவர்கள் கொடுத்த, 'ஐடியா'வின்படி, சமூக வலைதளங்கள் மூலமாக, மக்களிடம் உரையாட முடிவு செய்தார். 'சமூக வலைதளத்தில், என்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்; எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க தயார்' என, சமீபத்தில் அறிவித்தார் ராமா ராவ். இதையடுத்து, கேள்விகள் குவிந்தன. பெரும்பாலான கேள்விகள், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவே இருந்தன. 'குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், உங்களின் நிலை என்ன? சிறுபான்மையினர் விஷயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்பது போன்ற கேள்விகள் வந்து குவிந்தன.

இதற்கெல்லாம், நழுவலாகவே பதில் அளித்து வந்த ராமா ராவ், ஒரு கட்டத்தில், கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பின் வாங்கி விட்டார். 'நமக்கு நாமே, 'ஆப்பு' வச்சிக்கிட்டோமே' என, இப்போது புலம்புகிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement