Advertisement

'முதல்வரை கண்டு புயலுக்கு பயம்!'

சட்டசபையில், கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது. இதில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பே, முதல்வர், இ.பி.எஸ்., தயாராகி விட்டார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழையை எதிர்கொள்வதற்கு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 'இதை அறிந்தோ என்னவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல் இல்லாமல், வடகிழக்கு பருவமழை விடை பெற்றுக் கொண்டது. நம் முதல்வரை கண்டு, புயலும் பயப்படுகிறது' என்றார்.

இதைக் கேட்ட, ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'முதல்வரை புகழ்ந்து தள்ளுறதுல, இவர் எல்லாரையும் துாக்கி சாப்பிட்டுருவார் போலிருக்கே' என, தங்களுக்குள் பேசி சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    உங்கள் ஜெ வைக்கண்டு அன்று 2015 இல் மஹா பிரளயமாக கொட்டிய மழை பயப்பட வில்லை பரவாயில்லை, முதல்வர் இயற்கையையே பயமுறுத்துகிறார் King Canute கதை படித்துப் பாருங்கள் அமைச்சரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement