Advertisement

'யாருக்கெல்லாம், 'வளம்' ஏற்பட்டுச்சு...?'

மழைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 'மாமழை போற்றுதும்' என்ற நிகழ்ச்சி, கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அரசு செய்த சாதனைத் திட்டங்கள் குறித்து பேசிய போது, கோவையில், ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டது மிகப்பெரிய சாதனை என்றும், வீடு இழந்த பத்தாயிரம் பேருக்கு, புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதைக் கேட்டு, அரங்கத்தில் இருந்தவர்கள், கை தட்டி ஆரவாரம் செய்தனர். 'வீடு கட்டி கொடுக்காம இருந்திருந்தா, ஓட்டு போயிடும்ல...' என்று நிருபர் ஒருவர், 'கமென்ட்' அடிக்க, பக்கத்திலிருந்த மற்றொருவர், 'யாருக்கெல்லாம் இதுல, 'வளம்' ஏற்பட்டுச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா...' எனக் கேட்க, இரண்டையும் கேட்ட அதிகாரிகள், இடத்தை விட்டு நழுவினர்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மழையை இவர்கள் போற்றினாலும், தூற்றினாலும் பெய்யும்பொழுது பெய்யும். எதையோ சாக்கு வைத்து சுய விளம்பரம், அதற்கு லட்சக்கணக்கில் Arasu, அதாவது மக்களின் பணத்தை வாரி இறைக்க வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement