Advertisement

அதிகாரம் கைமாறி போச்சு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில், மிகச் சரியாக, காலை, 10:45 மணிக்கு வேட்பு மனு பெறப்பட்டது; 11:00 மணிக்கு தேர்தலை, அதிகாரிகள் நடத்தி முடித்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகையில், 'இதே போன்று, மிகச் சரியாக மதியம், 3:00 மணிக்கு, துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும்; அனைவரும் சரியான நேரத்துக்கு வந்துவிட வேண்டும்' என அறிவித்தனர். ஆனால், மாலை, 3:40 மணிக்கு தான், தலைவர் மற்றும் அ.தி.மு.க., ஆதரவு உறுப்பினர்கள், மன்ற அறைக்கு வந்தனர்.

'நீங்கள், மிகச் சரியாக, 3:00 மணிக்கு தேர்தல் நடத்தப்படும் எனக் கூறிய பிறகும், தாமதமாகிறதே சார்...' என, நிருபர்கள் சிலர், அதிகாரிகளிடம் கேட்டபோது, 'காலையில், எங்ககிட்ட அதிகாரம் இருந்தது; இப்போ, அதிகாரம் கைமாறிவிட்டது. இனி, அவங்க தான் எல்லாம்...' எனக் கூற, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமா போச்சு...' என நிருபர் ஒருவர் வேதனையுடன், 'கமென்ட்' அடித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement