Advertisement

போகலுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது வழக்கு

பரமக்குடி:பரமக்குடி தாலுகா போகலுார் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறி ஓட்டு பெட்டியில் மை ஊற்றிய தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிந்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
போகலுார் ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., வை சேர்ந்த சத்யா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது தி.மு.க., ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான கதிரவன் தனது வாக்கை செலுத்திய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த மை பாக்கெட்டை ஓட்டுப் பெட்டியின் மீது தெளித்துபிரச்னையில் ஈடுபட்டார்.இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி மை தெளித்த கதிரவன் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் கயல்விழி சத்திரக்குடி போலீசில் புகார் அளித்தார். கதிரவன் மீது இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement