Advertisement

காதலிக்க நேரமுண்டு..காதலிக்க ஆளும் உண்டு..

.nsimg2446540nsimg
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரம் முதியோர் இல்லம் அன்று கல்யாணக்களை கட்டியிருந்தது.
அமைச்சர்,கலெக்டர் உள்ளீட்ட பிரமுகர்களும் அந்தப்பகுதி வாழ் மக்களும் மணமுடிக்க போகும் அந்த தம்பதியைக் காண ஆர்வமுடன் திரண்டிருந்தனர்.
அதற்கு முக்கிய காரணம் மணமகனுக்கு வயது 67 மணமகளுக்கு வயது 65.இது முதியோர் திருமணம் மட்டுமல்ல காதல் திருமணமும் கூட
nsmimg741544nsmimg
இது எப்படி சாத்தியம் என்பதை அறிய மேற்கொண்டு படியுங்கள்
கிருஷ்ணன்-----_லட்சுமி தம்பதியர் இதே மாவட்டத்தில் உள்ள கைதேர்ந்த சமையல் கலைஞர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கு உதவியாளராக கோச்சன்ய மேனன் என்பவர் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலத்திற்கு மேல் உதவியாளராக இருந்தார்.
கிருஷ்ணன்_லட்சுமி தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது இந்த நிலையில் திடீரென கிருஷ்ணன் நோய்வாயப்பட்டார் பக்கத்தில் இருந்து மேனன்தான் நன்றாக பார்த்துக் கொண்டார் இறக்கும் தருவாயில் எனக்கு பிறகு லட்சுமியை நீதான் நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்.
கிருஷ்ணன் இறந்த பிறகு லட்சுமியம்மாளின் உறவுக்காரர்கள் அவரை பார்த்துக் கொள்வதாக சொல்லி வந்தனர் ஆனால் லட்சுமியம்மாளின் வீட்டை அபகரித்துக் கொண்டு லட்சுமியம்மாளை அம்போ என்று விட்டுவிட்டனர்.
அந்த நேரம் மேனன்தான் லட்சுமியம்மாளுக்கு துணையாக இருந்தார் திருமண வீடுகளில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து கிடைத்த கூலியில் லட்சுமியம்மாளின் தேவைகளையும் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் வெளியூர் வேலைக்கு சென்ற மேனன் உடல் நிலை சரியின்றி மயங்கி ரோட்டில் விழுந்தார் அவரை அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர் கொஞ்சம் கொஞ்சமாக தேறிவந்தார்.
இதற்கு இடையில் லட்சுமியம்மாள் வாழ்வாதாரமின்றி சிரமப்படவே அக்கம் பக்கத்தார் சேர்ந்து ராமவர்மாபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்
இப்படியே சில வருடங்கள் சென்று விட்டது மேனனை அவர் இருந்த முதியோர் இல்லத்தில் இருந்து ராமவர்மாபுரம் முதியோர் இல்லத்திற்கு அலுவல் நிமித்தமாக மாற்றினர். இங்கு மாறி வந்த மேனனுக்கு இன்ப அதிர்ச்சி காரணம் பல காலமாக பிரிந்திருந்த லட்சுமியம்மாளை பார்த்ததினால்;லட்சுமியம்மாளுக்கும் இதே நிலைதான் தான் தொலைத்துவிட்டதாக நினைத்த பொருள் திரும்ப கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி.
இருவரும் சேர்ந்து நிறைய பேசினர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது மன நிறைவையும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தனர் இது வெறும் அன்பு இல்லை காதல் என்பதை உணர்ந்தனர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஆலோசனையின் முடிவில் இல்லத்து நிர்வாகிகள் ஆதரவுடன் அமைச்சர் கலெக்டர் ஆசியுடன் கடந்த சனியன்று திருமணம் நடந்தது அந்தப்பகுதி மக்கள் மணமகளுக்கு பட்டு சேலையும் தாலியும் வாங்கிக் கொடுத்தனர் மணமகனுக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்தனர்,வந்திருந்த அனைவருக்கும் கல்யாண சாப்பாடு இல்லத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
நாங்கள் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று சிலர் கேலி செய்யலாம், இந்த வயதில் இவர்களுக்குள் எந்த உறவு முறையும் இல்லாமல் விடிய விடிய என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்ற சந்தேக பேச்சுக்கும் ஏச்சுக்கும் முதலில் ஒரு முடிவு கிடைக்கும் அதன்பிறகு எனக்கு ஒன்று என்றால் அவரும்,அவருக்கு ஒன்று என்றால் நானும் இருக்கிறோம் என்ற ஆறுதல் ஒன்றே வாழ்க்கையின் மிச்ச நாட்களுக்கு போதுமானது என்றனர் இந்த தம்பதியினர்...
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement