Advertisement

'டவுட்' தனபாலு

Share

தி.மு.க.,விலிருந்து விலகிய பழ.கருப்பையா: தி.மு.க., கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்தப்படுகிறது. எல்லாவற்றிலும், பணமே பிரதானமாக இருக்கிறது. அறிவு, நேர்மை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதனால் அக்கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்து, ஸ்டாலினை சந்தித்து பேசி விட்டு தான் வெளியேறினேன்.

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வில் இருக்கும் பலர், அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும், தலைவர்களின் போக்குக்கும் அனுசரித்து போகத் தானே செய்கின்றனர்; உங்களுக்கு திடீரென பிடிக்காமல் போனதற்கு, வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஒரு, 'புல் ரவுண்டு' போயிட்டு வந்தாச்சு; அப்புறம் தனிக்கட்சி தானோ... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: எகிப்து வெங்காயம், காரம், மணம், சுவை நிறைந்தது; மருத்துவ குணம் கொண்டது. இதயத்திற்கு மிகவும் நல்லது. முதல்வரே இந்த வெங்காயத்தை சாப்பிட்டுப் பார்த்து, மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்.

'டவுட்' தனபாலு: எகிப்து வெங்காயத்தில் காரம், மணம், குணம், சுவை சிறப்பாக இருப்பது உண்மையானால், இதயத்திற்கு மிகவும் நல்லது என்றால், தமிழக, வி.ஐ.பி.,கள், 'ஆலிவ்' எண்ணெய் போல, இறக்குமதி செய்து, பயன்படுத்தி இருக்க மாட்டார்களா; எனவே, நீங்கள் சொல்வது, சமாளிப்பு என்பது, 'டவுட்' இல்லாமல் புரிகிறது.

பத்திரிகை செய்தி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, தீவைத்து எரித்து கொன்ற நால்வரை, அந்த மாநில போலீசார், 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொன்றது குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிர்புர்க்கர் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: 'நாட்டில், பச்சிளம் குழந்தைகள் முதல், பல்லு போன பாட்டி வரை, பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகும் நிலையில், அதற்கான காரணம்; தடுக்கும் முறைகள் குறித்து ஆராய, விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லையே... அதே நேரத்தில், நான்கு கயவர்கள் கொலை குறித்து ஆராய மட்டும் கமிஷனா...' என, மக்கள் கேட்கின்றனரே, அது, உச்ச நீதிமன்றத்தின் காதுகளில் விழவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஹிந்துத்வாவை மிக கேவலமாக விமரிசத்தவர் எனவே அடுத்து காவிக்கட்சிக்கு தான்

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\எல்லாவற்றிலும், பணமே பிரதானமாக இருக்கிறது. அறிவு, நேர்மை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. ............\\ .... இந்த உண்மை இப்பதான் இவருக்கு புரிஞ்சுதா? .............. அப்புறம் அது என்ன "கார்பொரேட்", "கார்பொரேட்" அப்படின்னு எல்லாரும் கூவறாங்க? கார்பொரேட் நிறுவனங்கள் கட்சிகளை விட நேர்மையாவும் நல்லாவும் தான் நடத்தறாங்க ............ கார்போரேட்டை திட்டறவங்க எல்லாம், ஒன்னு கார்பொரேட் மாதிரி நிறுவனங்களை நடத்தறாங்க, இல்லே அங்கே வேலை பாக்கறாங்க ............ சொந்த தொழில் செய்யறவங்களுடைய எதிர்கால ஆசையும் ஒரு நிறுவனம் நடத்தறதுதான் .............. அது அப்ப கார்பொரேட் ஆகாதா? ............

 • V.N.ASHWIN - chennai,இந்தியா

  Ipdi dhaan Munnaal mudhalvar hospital eh idly saaptaanga nu sonnaanga, ipo current cm eh vengaayam saaptu nallaa iruku nu sonnaarunu solraanga, pora pokkai paartha thunai mudhalvarum adutha dharma yudhhathuku ready aaguduvaaru

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  பாலியல் குற்றவாளிகளை அருமையாகக் காப்பாற்றி, ஆற அமர எட்டு வருஷமாகியும், ‘கயிறைக் காணோம், ஆளைக் காணோம்’ என்று இழுத்தடித்து, அவர்கள் இயற்கை மரணம் எய்த விடாமல் இப்படி கேஸை முடித்தது தவறுதானே நிர்பயா, எங்க பொள்ளாச்சியை பாருங்க

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Janata to ADMK to DMK ........... Doing business in politics. Not a desirable element in politics.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement