Advertisement

ஞாபக மறதியால் அவதி!

'பார்லிமென்டிற்கு நுழைந்தாலே, எல்லாரும் என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது; இது மாயையா அல்லது நிஜமா என்று தான் தெரியவில்லை' என, குழம்பிப் போயுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ்.

சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு வந்த அவர், தன் விலையுயர்ந்த மொபைல் போனை வைத்துச் சென்று விட்டார். வீட்டுக்கு போனதும் தான், மொபைல் போன் குறித்த ஞாபகம் வந்தது.வீடு முழுவதும் சல்லடை போட்டு அலசியும் பயன் கிடைக்கவில்லை. ராஜ்யசபாவுக்கு வந்து, தன் இருக்கை அருகே தேடியும் மொபைல் போன் கிடைக்கவில்லை. ஜெய்ராமுக்கு கால், கை எல்லாம் வெடவெடத்தன. அந்த மொபைல் போனில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரகசியமான, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் இருந்தன. 'இது, எதிர்க்கட்சியினரின் கைகளில் கிடைத்தால், அவ்வளவு தான்' என, நடுக்கம் ஏற்பட்டது.

ராஜ்யசபா கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, சக உறுப்பினர் ஒருவர், கீழே கிடந்த மொபைல் போனை எடுத்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, சபை காவலரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அந்த காவலரிடம் உடனடியாக பேசி, மொபைல் போனை வாங்கியதும் தான், அவருக்கு மூச்சே வந்தது. இந்த விவகாரம், சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்ததும், ஜெய்ராமிடம் வந்து, துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர். 'ஞாபக மறதியால், இன்னும் என்னென்ன அவமதிப்புகளை சந்திக்கப் போகிறோமோ...' என, முணுமுணுக்கிறார், ஜெய்ராம் ரமேஷ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சகதோழிகளின் ரகசிய தொலைபேசி எண்கள் இருந்திருக்கலாம் திக் விஜயின் நண்பர் தானே வயதானால் பெண் நண்பர்கள் கண்டிப்பாக இருக்கலாம்

  • karutthu - nainital,இந்தியா

    இவர் வயதிற்கு ஞாபக மராத்தி எல்லாம் சாதாரணமானது தான் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement