Advertisement

'வடக்கே போனா தான் கிடைக்கும்!'

Share

பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில், சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம், 'தமிழகத்தில், பா.ஜ., பலம், அ.தி.மு.க, பலம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் எவ்வளவு என்பதை கணக்கெடுத்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல் நடக்கும், 27 மாவட்டங்களுக்கும் கூட்டணி பேச்சு நடத்த, மாவட்ட அளவிலான குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'எந்த பகுதியில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி, பட்டியல் தயாரித்துள்ளோம். கன்னியாகுமரியை பொறுத்தவரை, 60 சதவீதம் இடத்தை, அ.தி.மு.க.,விடம் கேட்போம். பிற மாவட்டங்களின் பலத்தை பொறுத்து, சதவீத அடிப்படையில் இடம் கேட்காமல், நம்பர் அடிப்படையில், 'சீட்' கேட்போம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., 60 முதல், 70 சதவீத இடங்களில் போட்டியிட்டு, மீதமுள்ள இடங்களை மட்டும், கூட்டணி கட்சிக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. பா.ஜ., எதிர்பார்க்கிற, 'சீட்' எல்லாம், வட மாநிலத்திற்கு போனா தான் கிடைக்கும்' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலை குனிந்தபடி சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அறுபது, எழுபதென்று தூக்கிக் கொடுக்க அதிமுக காத்திருக்கிறது என்று நினைத்தாரா? அஞ்சு பத்து தேறி, அதில் கூட அஞ்சு பேர் ஜெயித்தால் அதிகம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement