Advertisement

கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிடிச்சே!

Share

'இனி கட்சி நடத்த முடியாது போலிருக்கிறது; வேறு தொழிலுக்கு போக வேண்டியது தான்' என, கண்ணீர் வடிக்கிறார், கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி.

கர்நாடகாவில் சமீபத்தில், 15 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத் தேர்தல் நடந்தது. இதில் குறைந்தது, எட்டு தொகுதிகளிலாவது பா.ஜ., வெற்றி பெற்றால் தான், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு நீடிக்கும் என்ற நிலை இருந்தது.மறு பக்கம் காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளமும் கடும் நெருக்கடி கொடுத்தன. எடியூரப்பா பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம், இந்த இரண்டு கட்சியினரும் எதிர் பிரசாரம் செய்தனர்.

'எடியூரப்பா, அரசு இயந்திரத்தை தேர்தலுக்காக தவறாக பயன்படுத்துகிறார். ஜாதி, மதத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்கிறார்' என, குமாரசாமியும், அவரது பரிவாரங்களும் பாடாய்படுத்தின.'எப்படியாவது எடியூரப்பா அரசை கவிழ்த்து, காங்கிரஸ் ஆதரவுடன், மீண்டும் நாம் முதல்வராகி விட வேண்டும்' என, ரொம்பவே மெனக்கெட்டார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின், நொந்து நுாலாகி விட்டார், குமாரசாமி. 15 தொகுதிகளில் ஒன்றில் கூட, அவரது கட்சி வெற்றி பெறவில்லை. தேர்தல் நடந்த, 15ல், 12 தொகுதிகளில் வெற்றி பெற்று, எடியூரப்பா, முதல்வர் நாற்காலியில் நங்கூரம் போட்டு அமர்ந்து விட்டார்.

மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரோ, 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டதே, நம் கட்சியின் நிலை' என, குமாரசாமியை பார்த்து விசும்புகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    குமாரசாமியின் குடும்பம் தமிழகத்தின் மூலபத்திரம் காட்டாத குடும்பம் போல , எல்லா துறைகளிலும் பிசினஸ் வைத்துள்ளது , அதே போல ரெண்டுபொண்டாட்டி காரன் கூட

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement