Advertisement

'அ.தி.மு.க.,விற்கு கே.எஸ்.அழகிரி வக்காலத்து?'

Share

காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் அழகிரி பேச துவங்கியதும், இரு தரப்பினர் ஆவேசமாக வாக்குவாதம் செய்து, அழகிரி முன்னிலையிலேயே தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

சமரசத்திற்கு பின் அழகிரி, 'ஜெயலலிதா திறமையானவர்; சுண்டுவிரல் அசைவில், அ.தி.மு.க.,வை வைத்திருந்தார். இந்தக் கட்டுப்பாடான தலைமையை தான், மக்கள் மதிக்கின்றனர். கட்டுப்பாடு இல்லாமல் கட்சி நடத்தி, பிரயோஜனம் இல்லை. மேடைக்கு கீழே நான் அமர்ந்திருந்தால், இவர்கள் சண்டையைப் பார்த்து, இந்தக் கட்சியில் இருக்க வேண்டுமா என, சென்றிருப்பேன்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா மறைவிற்கு பின், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., இன்னும் கட்டுக்கோப்பாக இருப்பதை தான், அழகிரி மறைமுகமாக கூறுகிறாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, அனைவரும் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement