Advertisement

தனி வார்டாக அறிவித்ததை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Share

சிறுபாக்கம்:தனி வார்டாக அறிவித்ததை கண்டித்து, மங்களூர் ஒன்றிய அலுவலகம் முன், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட, பெரங்கியம் கிராமத்தின் 9வது வார்டு, பொது வார்டாக இருந்தது. நடப்பு உள்ளாட்சி தேர்தலில் தனி வார்டாக அறிவிக்கப்பட்டது. இதனை மாற்ற கோரி அப்பகுதி மக்கள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பகல் 11:00 மணியளவில், மங்களூர் தேர்தல் அலுவலரிடம், உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, வாக்காளர், ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதாக கூறினர். அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து கார்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டனர். பின்னர், ஒன்றிய அலுவலகம் முன் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும், பொது வார்டாக மாற்ற கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement