Advertisement

'இதைத் தான் எதிர்பார்த்தேன்!'

Share

ஜக்தீப் டங்கர், மேற்கு வங்க மாநில கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கும் இடையே முட்டல், மோதல் துவங்கி விட்டது.

'அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் நல திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யப் போகிறேன்' என, 'டூர்' கிளம்பினார், கவர்னர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. 'எங்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருப்பதால், வேறொரு நாளில் உங்கள் பயணத்தை ஏற்பாடு செய்யுங்கள்' எனக் கூறி விட்டனர்.இதை சற்றும் எதிர்பார்க்காத கவர்னர், 'முதல்வர் மம்தாவின் உத்தரவால் தான், அதிகாரிகள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.

இந்த விஷயத்தில், அவர்கள் கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்' என, எச்சரித்தும் பலன் கிடைக்கவில்லை. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார். பா.ஜ.,வின் தாய் அமைப்பான ஜன சங்கத்தின் மூத்த தலைவராக இருந்த, மறைந்த, ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் மிகப் பெரிய படத்தை, கவர்னர் மாளிகையில் மாட்டி வைத்துள்ளார்.

முதல்வர் மம்தா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, 'இதைத் தான் எதிர்பார்த்தேன். அடுத்த கட்டமாக, சட்டசபையிலும் ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் படத்தை மாட்ட உத்தரவிடப் போகிறேன். இதை ஆளும் கட்சியினர் எப்படி தடுப்பார்கள் என பார்ப்போம்' என, உற்சாகத்துடன் கூறி வருகிறார், கவர்னர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement