Advertisement

வீட்டில் புதையல்: தோண்டியவருக்கு எச்சரிக்கை 

சோழவரம்:ஜோசியர் கூறியதை எண்ணி, புதையலுக்காக வீட்டினுள்ள, 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியவரை வருவாய் துறையினர் எச்சரித்து, பள்ளத்தை மூடி நடவடிக்கை எடுத்தனர்.
சோழவரம் அடுத்த, கும்மனுார் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 62. ஐஸ் வியாபாரி. இவர் வீட்டின் உள்பகுதியில். சில தினங்களாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்து, நேற்று முன்தினம் மோகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.வீட்டினுள், 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கண்டனர்.மோகனிடம் விசாரித்ததில், வீட்டில் புதையல் இருப்பதாக ஜோசியர் கூறியதால், பள்ளம் தோண்டிதாக தெரிவித்தார்.இது போன்ற நடவடிக்ககைளில் ஈடுபடக்கூடாது என, மோகனை வருவாய் துறையினர் எச்சரித்தனர். பின், பள்ளத்தினை மூட நடவடிக்கை எடுத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement