Advertisement

வழிப்பறி செய்த வாலிபர் சிக்கினார்

Share

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த, பாரேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி ஆலிஸ், 47.நேற்று முன்தினம் இரவு, அதே பகுதி ரேஷன் கடை அருகில், நடந்து சென்றார்.
அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஆலிஸ் கழுத்திலிருந்த, 5 சவரன் செயினை பறித்தனர்.ஆலிஸ் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்தோர் விரட்டி சென்று, அவர்களை மடக்கி பிடித்தனர்.போலீசார் விசாரணை செய்ததில், மண்ணிவாக்கம் சண்முக நகரைச் சேர்ந்த தயாளன் மகன் மணிகண்டன், 22, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து, 5 சவரன் செயினை, போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய, தாம்பரம், வரதராஜபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை தேடுகின்றனர்சண்டையில் இளைஞர் மண்டை உடைப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சதாவரம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரை, கடந்தாண்டு, ஒரு கும்பல் கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உதயா, 26, உதயகுமார், 24, ஆகியோரை, அப்போதே, போலீசார் கைது செய்தனர்; தற்போது, வெளியில் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, உதயாவும், உதயகுமாரும், சதாவரம் அருகே, மது அருந்தினர். அப்போது, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த உதயகுமார், மதுபாட்டிலால், உதயா மண்டையை உடைத்தார்.உதயா புகாரை, தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, உதயகுமாரை, நேற்று கைது செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement