Advertisement

துாண்டிலில் சிக்குவாரா பங்கஜா?

மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ.,வின் முக்கிய தலைவர் பங்கஜா முண்டே. அம்மாநில துணை முதல்வராக இருந்த,கோபிநாத் முண்டோவின் மகள். கோபிநாத் ஒரு விபத்தில் காலமானார்.இதையடுத்து, பா.ஜ., கடந்தமுறை ஆட்சிக்கு வந்தபோது, பங்கஜாவை முதல்வராக தேர்வு செய்வர் என, அனைவரும் எதிர்பார்த்தனர். பங்கஜாவிற்கு அனுபவம் போதாது என்பதால், தேவேந்திர பட்னவிசுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பங்கஜா, அமைச்சர் பதவியுடன் திருப்தி அடைய நேர்ந்தது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றபோதிலும், பங்கஜா மட்டும் தோல்வி அடைந்தார்.'மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில், பங்கஜாவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. பட்னவிஸ் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்களால், அதை ஜீரணிக்க முடியவில்லை. திட்டம் போட்டு, அவரை தோற்கடித்து விட்டனர்' என, பங்கஜாவின் ஆதரவாளர்கள் பொறுமினர்.

தற்போது, மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களால், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகி விட்டார். பங்கஜா, சத்தம் காட்டாமல் அமைதியாக இருக்கிறார். 'சிவசேனா கட்சியினர், பங்கஜாவுக்கு துாண்டில் போடுகின்றனர். எந்த நேரத்திலும், அவர் கட்சி தாவலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கலக்கம் அடைந்துள்ள, பா.ஜ., தலைவர்கள், 'சிவசேனா துாண்டிலில், பங்கஜா சிக்கி விடுவாரோ...' என, புலம்புகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement