Advertisement

உள்ளாட்சித் தேர்தல் கட்சிகள் நிலை என்ன?

Share

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நிச்சய மாக நடக்கும் சூழலை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், கிட்டத்தட்ட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது.

ஏற்கனவே இரு கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவித்த ஆணையம், அதே டிச., 27 மற்றும் 30ம் தேதிகளை முடிவு செய்து அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவுகள் வெளியாகின்றன. மறைமுகத் தேர்தல் மூலம் தலைமையைத் தேர்வு செய்யும் போது, எந்தெந்த கட்சி தன் அரசியல் வீச்சை காட்டும் என்பது, வரும் பொங்கல் சமயத்தில் முடிவாகும்.ஆனால் உள்ளாட்சித் தேர்தல், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி உட்பட ஒன்பது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், அப்படியே நீர்மேல் எழுத்தாக, எதுவும் முடிவின்றி காத்துக் கிடக்கும்.

ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டு கள் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்ற கருத்துக்கு விளக்கம் கேட்டபோது, புதிய மாவட்டங் களில் வார்டுகள் கட்டமைப்பு மாறும் போது பிரதிநிதிகள் தேர்வில், உரிய நடைமுறை எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்தது. இதை சுப்ரீம் கோர்ட் கையாண்ட விதம் சிறப்பானது. அதற்கு தெளிவான பதில் இல்லாமல் போய் விட்டது.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தளவில் விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டசபை இடைத் தேர்தல்கள் வெற்றி அக்கட்சிக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பாக கருதப்படுவதால், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் என்பது காத்திருக்காமல் நடத்தப்பட அக்கட்சி விரும்பு வது, ஒரு அரசியல் அணுகுமுறையே. அ.தி.மு.க., கிராமப்புறங்களில் தொண்டர்களுக்கு உரிய பதவிகளைத் தர இத்தேர்தல் வாய்ப்பாகும்.

ஆனால், ஆரம்பம் முதலே பல குறைகளை கூறி, சட்டத்தின் வாயிலாக சில முடிவுகளை கொண்டுவர விரும்பும், தி.மு.க., தலைமை, இதை வழக்காக்கினாலும், உள்ளாட்சித் தேர்தலில், குளறுபடிகள் குறையும் வண்ணம் தீர்ப்பு வந்து விட்டது. அக்கட்சியும் முதலில் இத்தேர்தலை சந்தித்து, தன் கூட்டணி பலத்தை கிராம அளவில் நிரூபித்தாக வேண்டும்.

முதலில் தேர்தல்களை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது, அரசியல் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் தலையீடு கூடாது என்பதின் அடையாளமாகும். மாநகராட்சிகளுக்கு அடுத்த கட்ட தேர்தல் என்பது விரைவில் நடக்கும் என்ற தேர்தல் கமிஷன் முடிவு, சுப்ரீம் கோர்ட் காட்டிய பாதையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வரலாம்.ஏனெனில், ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல், அவை தொகுதி வரையறை அடிப்படையில் நடக்கும் என்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்ற பிரிவினருக்கு உள்ள பிரதிநிதித்துவம் முறையாக இருக்க, தேர்தல் கமிஷனும், அரசும் முறையாக செயல்படுத்த வேண்டும்.

ஆனாலும், இதன் வரையறைகள் முறையாக இருப்பதாக கமிஷன் தெரிவித்திருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், வார்டுகள் மறுவரையறை என்பதில் என்ன நடக்கப் போகிறது என்பது, அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அடுத்ததாக எழும். ஏனெனில், தற்போது தேர்தல் நடக்கும் சில மாவட்டங்கள், நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டதால், அதன் எல்லைகளில் அமைந்த வார்டுகள் சில சுருங்கி இருக்கலாம்; சிலவற்றில் அதிக வாக்காளர்கள் கூட இருக்கலாம்.

தவிரவும், தி.மு.க., கூட்டணி கட்சிகள், தங்களுக்கு அளிக்கப்படும் இடங்களை தக்கவைக்க முயற்சிக்கலாம். அ.தி.மு.க.,வை பல விஷயங்களில் ஆதரிக்கும் பா.ஜ., அதிக இடங்களை கேட்கும் பட்சத்தில், அ.தி.மு.க., அதை கையாளுவது எப்படி என்ற கருத்துகளும் இனி பேசப்படும். தே.தி.மு.க., வைகோவின் ம.தி.மு.க., உட்பட சில கட்சிகள் தங்கள் ஆதரவைப் பிரதிபலிக்க என்ன உத்தி மேற்கொள்ளும் என்று இப்போது முடிவு கட்ட முடியாது.தவிரவும், இன்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவைப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வரும் காலத்தை, மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் வழிகாட்டுகின்றன. அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி, பயன்பாடின்றி இருப்பதால், இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை சாமர்த்தியமாக நடத்த இந்த ஏற்பாடு என்றே கருதலாம்.

ஆகவே, இந்த அமைப்பில், எந்த அளவு புதிய நிர்வாக சூழ்நிலைகளை அனுசரிக்கும் நபர்கள் தேர்வாகக் கூடும் என்ற கேள்வியும் எழுகிறது. அதை, கட்சிகள் மக்களிடம் விளக்க வேண்டும்.சமூக வலைதளங்கள் பல்வேறு வசதி குறைவு களை, தேர்தல் நடக்கும், 27 மாவட்டங்களில், தங்கள் இஷ்டப்படி பரப்புரை செய்யும் போது, அதில் எது சரியான தகவல் என்பதை யூகிக்க கூட வாக்காளர்கள் முன்வர மாட்டார்கள். அதற்கான கால அவகாசமும் இல்லை. அதைத் தாண்டி பொங்கல் பரிசு கிடைக்கும் போது, கிராமப்பகுதி மக்கள் ஓட்டளிக்க, அது கவர்ச்சியான அம்சமாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement