Advertisement

திருத்தவே முடியாது!

Share

'இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியத்துக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லையே' என, புலம்புகின்றனர், மஹாராஷ்டிரா மாநில மக்கள். இந்த மாநிலத்தில், ஏற்கனவே, காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தபோது, துணை முதல்வராக பதவி வகித்தவர் அஜித் பவார்.

தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவரான இவர், பதவியில் இருந்தபோது, மும்பை, மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள, 'தேவ்கிரி' என்ற அரசு பங்களாவில் வசித்தார். அனைத்து வசதிகளும் உடைய இந்த பங்களா மீது, மஹாராஷ்டிரா அரசியல்வாதிகள் அனைவருக்குமே அலாதி பிரியம். அஜித் பவார், 15 ஆண்டுகள் இந்த பங்களாவில் வசித்தார். அதற்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ., அரசு பதவிக்கு வந்ததும், அந்த கட்சியைச் சேர்ந்த சுதிர் முங்கத்திவாருக்கு, இந்த பங்களா கிடைத்தது.

தற்போது, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தேவ்கிரி பங்களாவை பிடிக்க, முட்டி மோதி வருகின்றனர். ஆனால், 'அஜித் பவார், விரைவில் அமைச்சரவையில் இடம் பிடித்து விடுவார். அவருக்கு தான், இந்த பங்களா ஒதுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். மஹாராஷ்டிரா அரசியல்வாதிகள், அரசு பங்களாவுக்காக ஆலாக பறக்கும் இந்த கூத்தை பார்த்து, 'இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது' என, வேதனைப்படுகின்றனர், அந்த மாநில மக்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement