Advertisement

காலியாகும் கட்சி!

Share

'நான் சிறையிலிருந்து வெளியில் வருவதற்குள், கட்சி இருக்குமா என்றே தெரியவில்லை' என,
கண்ணீர் வடிக்கிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.


இவர், பீஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, பல வழக்குகள், லாலு மீது தொடரப்பட்டன. அதில், சில வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாலு சிறைக்கு சென்றதுமே, அவரது கட்சி கலகலத்து விட்டது. கட்சியை கைப்பற்றுவதில், அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சியினர், இரண்டு அணியாக பிரிந்தனர்.

தற்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களிடையேயும் மோதல் ஏற்பட்டு, கட்சி மேலும் பல பிரிவுகளாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. லாலுவின் நெருங்கிய நண்பரான ரகுவன்ஷ் பிரசாத், கட்சியின் துணை தலைவராக உள்ளார். இவருக்கும், பீஹார் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகதானந்துக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு
எழுந்துள்ளது. 'கட்சி அலுவலகத்துக்குள், தொண்டர்களும், நிர்வாகிகளும், அனுமதியின்றி நுழையக் கூடாது' என, ஜெகதானந்த் உத்தரவிட்டுள்ளார். 'இது, என்ன அரசு அலுவலகமா... இப்படியிருந்தால், கட்சியில் ஒரு தொண்டர் கூட இருக்க மாட்டார்கள்' என, ஆவேசப்படுகிறார், ரகுவன்ஷ் பிரசாத்.

இந்த தகவல், சிறையில் இருக்கும் லாலுவுக்கு எட்டியதும். 'கட்சியை காலி செய்து விட்டுத் தான், மறுவேலை பார்ப்பர் போலிருக்கிறது' என, கண்களை கசக்குகிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement