Advertisement

'தேச விடுதலைக்காகவா போராடினாரு...?'

Share

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைதாகி, 106 நாட்கள், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, உச்ச நீதிமன்றம், ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவை வரவேற்கும் வகையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், உற்சாகமாக கொண்டாடுமாறு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், பத்தாயிரம் வாலா சரவெடிகள் வெடிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு, பிரியாணி பொட்டலங்களும் வழங்கப்பட்டன. அந்த வழியே சென்ற, மாநகர பஸ்களை நிறுத்தி, பயணியருக்கு லட்டுகளை வழங்கினர்.


அப்போது, பயணி ஒருவர், 'எதற்கு இந்த லட்டு?' எனக் கேட்டார். காங்கிரசார், 'சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைத்ததற்காக...' என்றனர். அந்த பயணி, 'ஏதோ, தேச விடுதலைக்கு பாடுபட்டு, சிறையில் இருந்தது போல, கொண்டாடுகிறீர்களே...இது, ஓவரா தெரியலையா...' என, 'பட்'டென கேட்டார். அதற்கு, நிர்வாகிகள் பதில் கூற முடியாமல், விக்கித்து நின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வெக்கம் கெட்ட காங்கிரசார் , இங்கே சிவகுமாருக்கு அங்கே சிதம்பரத்துக்கு என்று ஊழல்வாதிகளை வளர்த்து விடுவதில் காங்கிரசின் பங்கு அளப்பரியது என்று வேண்டுமானால் மனதில் இருத்திக்கொள்கிறேன்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஊழல் வழக்கில் 'உள்ளே' இருந்ததற்கு அவமானம் படும் காலமெல்லாம் போய் , ஜாமீனுக்கே லட்டுக் கொண்டாட்டம் பரவாயில்லை யாரோ 'தைரியசாலி' மற்றவர்களின் மனநிலையை வெளிப்படுத்தி விட்டார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement