Advertisement

'டவுட்' தனபாலு

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு எங்களால் தான் கிடைத்தது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா, பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஆகிய மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி, இட ஒதுக்கீடு பெறப்பட்டது. இது, எங்கள் சாதனை!

'டவுட்' தனபாலு: ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால், உங்களின், 'தோலை' உரித்திருப்பார். அவர் உயிருடன் இருந்த போது, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என, பட்டம் கொடுத்த நீங்கள், இப்போது அவரை, 'பாப்பாத்தி' என்கிறீர்கள். சரி போகட்டும்; இது, உங்களுக்கு வழக்கம் தான். சந்து, பொந்துகளில் நின்று நீங்கள் போராடியதால், 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததா அல்லது நீங்கள் குறிப்பிடும் மூன்று பார்ப்பனர்களின், தாராள எண்ணத்தால் கிடைத்ததா என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்க பொதுச் செயலர் கண்ணையா: இந்திய ரயில்வேயில் இனி, இளைஞர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது சாத்தியமில்லை. ஒப்பந்த அடிப்படையிலேயே வேலைக்கு இளைஞர்கள் எடுக்கப்படுகின்றனர். வேலை முடிந்ததும், வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை தடுக்க, அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: ரயில்வே துறை மட்டுமின்றி, பல பொதுத்துறைகளில் நிலைமை இது தான். நிரந்தர பணிக்கு சேருபவர்கள், நேர்மையாக பணியாற்றாமல், கடவுள் தங்களுக்கு கொடுத்த பரிசு என கருதி, சொதப்புவதால் தான், இந்த முடிவுக்கு, மத்திய அரசு வந்துள்ளது என்கிறீர்களா; அது உங்களுக்கு தெரியாதா; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

பத்திரிகை செய்தி: தி.மு.க., - எம்.பி.,க்கள் பாலு, சிவா, கனிமொழி ஆகியோர், டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்தனர். மேலும், கருணாநிதி எழுதிய, 'குறளோவியம்' என்ற நுாலையும், 'முரசொலி' வெளியிட்ட, கருணாநிதி நினைவு மலரையும் வழங்கினர்.

'டவுட்' தனபாலு: பிரதமர் மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், 'கோ பேக் மோடி' என, கறுப்பு பலுான்களை பறக்க விடும், தி.மு.க., அதை தவிர்த்து, தமிழகத்திற்கு மோடி வரும் போது, அவரை சந்தித்து, இந்த புத்தகங்களை வழங்கியிருக்கலாமே... இந்த சந்திப்பின் பின்னணியில், தி.மு.க., பிரபலங்களின் சொந்த கோரிக்கை உள்ளது என, அ.தி.மு.க.,வினர் முணுமுணுக்கின்றனரே... அந்த குரல் உங்களுக்கு கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ARUN.POINT.BLANK -

    வீரமணி பாசிக்குதா... யாரும் ஓசி சோறு போடல?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement