Advertisement

பீதியா இருக்கு...!

Share

'இவர் நல்லவரா, கெட்டவரா... இவரை நம்பலாமா, கூடாதா...' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை சந்தேக கண்ணோட்டடத்துடனேயே பார்க்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த அதிரடியான அரசியல் மாற்றங்கள், அந்த மாநில அரசியல் தலைவர்களை மட்டுமல்லாமல், தேசிய கட்சி தலைவர்களின் துாக்கத்தையும் கெடுத்து விட்டது. 'கறுப்பு ஆடு யாராக இருக்கக் கூடும்' என, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல், மற்றவர்களை சந்தேகமாகவே பார்க்கின்றனர்.

'இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது, தேசியவாத காங்., கட்சியின் முன்னணி தலைவரான அஜித் பவாராக இருந்தாலும், அவரை ஏவி விட்டு, சத்தமில்லாமல் வேடிக்கை பார்த்தது சரத் பவார் தான்' என்ற சந்தேகம், அனைவருக்கும் உள்ளது. மஹாராஷ்டிராவில், ஒரு வழியாக, சிவசேனா தலைமையில், காங்., தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்து விட்டது. ஆனால், இந்த அரசு நீடிப்பதும், கவிழ்வதும், சரத் பவார் கையில் தான் உள்ளது.

'எங்கள் கட்சி தலைவர் சோனியாவுடன், சரத் பவாருக்கு பழைய பகை உள்ளது. இந்த பகையை, இப்போது அவர் மறந்திருக்கலாம். ஆனால், எப்போது வேண்டுமானாலும், பகையை தீர்ப்பதற்கான முயற்சியில் இறங்கலாம். அவரை நம்ப முடியாது' என்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.

சிவசேனா கட்சியினரோ, 'அவரை நினைத்தால், எங்களுக்கும் கொஞ்சம் பீதியாகத் தான் இருக்கிறது' என, நடுக்கத்துடன் கூறுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement