Advertisement

சூதாட்ட தொழிலில் ஆளுங்கட்சி புள்ளி தம்பி, 'சுறுசுறு!'

Share

''கிரிமினல் வழக்குல சிக்குனவருக்கு பதவி தர்றதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்குல்லா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க இந்த அநியாயம்...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.

''சென்னை, செங்குன்றம் பக்கத்துல, நல்லுார் ஊராட்சி தலைவரா இருந்தவர், பார்த்திபன்... அப்பாவி தொழிலாளர்களை, ஆந்திராவுக்கு கூட்டிட்டு போய், செம்மரங்களை வெட்டி, கடத்திட்டு இருந்தாரு வே... ''ஜெயலலிதா ஆட்சியில, பார்த்திபனை, ஆந்திர போலீசார் கைது செஞ்சிட்டாவ... உடனே, அவரை கட்சியில இருந்து, ஜெயலலிதா கட்டம் கட்டிட்டாங்க வே...

''சமீபத்துல ஜாமின்ல வந்த பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட, அ.தி.மு.க., பிரமுகர் மூலமா, முதல்வரை பார்த்திருக்காரு வே... ''பார்த்திக்கு மறுபடியும் கட்சி பதவி தரவும், உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' குடுக்கவும், மாவட்ட பிரமுகர் ஒருத்தர் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு... இதுக்காக, பார்த்திபனிடம், கணிசமான தொகையையும் கறந்துட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''பலராமன்... இந்த பேப்பரை அப்படி வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''எம்.எல்.ஏ., மில்லுக்கு குடிநீர் இணைப்பை, 'கட்' பண்ணிட்டாங்க...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார்.

''எந்தத் தொகுதியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருச்சி, மண்ணச்சநல்லுர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பரமேஸ்வரி... இவங்க, ரெண்டு வருஷத்துக்கு முன்ன, மண்ணச்சநல்லுார் தாசில்தார் அலுவலகம் பக்கத்துல, நவீன ரைஸ்மில் ஒண்ணை விலைக்கு வாங்குனாங்க...''இதுக்கு குடிநீர் இணைப்பு தர, தன் தொகுதி நிதியில இருந்து, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்குனாங்க... டவுன் பஞ்சாயத்திடம் எந்த அனுமதியும் வாங்காம, பொதுமக்களுக்கு போற குடிநீர் இணைப்புல இருந்து, ரைஸ் மில்லுக்கு குடிநீர் இணைப்பு குடுத்துட்டாங்க...''குடிநீரை ரைஸ்மில்காரங்க மொத்தமா உறிஞ்சிட்டதால, வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காம போயிடுச்சு... பொதுமக்கள், டவுன் பஞ்., அலுவலகத்துல புகார் செஞ்சாங்க... பஞ்., நிர்வாகமும், ரைஸ் மில்லுக்கு கொடுத்த குடிநீர் இணைப்பை கட் பண்ணிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கோவை, கோவில்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள்ல, ராத்திரி நேரத்துல, 'வெட்டாட்டம்'கிற சூதாட்டம் களை கட்டறது... இதுல, 10 ஆயிரத்துல இருந்து, லட்சக்கணக்குல பலரும் பணத்தை இழந்துட்டு போறா ஓய்...

''இந்த சூதாட்டம் பத்தி, போலீசாருக்கு தெரிஞ்சும், மவுனமா இருக்கா... ஏன்னா, இந்த சூதாட்டத்தை நடத்தறதே, அந்தப் பகுதி, ஆளுங்கட்சி புள்ளி ஒருத்தரின் தம்பி தான் ஓய்... தொழிலை நடத்துற அவரே, ஒரு வெட்டாட்ட பிரியரும் கூட... ''தினமும், இதுல பணத்தை இழந்துட்டு, சோகத்தோட பலரும் போறா... யாராவது, மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணி, விவகாரம் பெருசாகறதுக்குள்ள, போலீசார் முழிச்சுண்டா நல்லது ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''வாரும் கிட்டுசாமி... காய்ச்சல் குணமாயிட்டா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி, நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - sennai ,இந்தியா

    .......சீட்' குடுக்கவும், மாவட்ட பிரமுகர் ஒருத்தர் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு..இதுதான்,ஆட்சி,நல்லாவே நடக்குது-கிடைச்சாமி போல..

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    யார் அந்த கிட்டுசாமி உடனே அவரை காவல் துறை சூதாட்டம் சம்பந்தமாக விரசரனை செய்யவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement