Advertisement

கடலடி நிலநடுக்கத்தை அறிய வழி!

Share

ஆழ்கடல் தரைத்தளத்தின் மீது தகவல் தொடர்பு, இணையம் போன்றவற்றுக்காக, 'பைபர் ஆப்டிக் கேபிள்' எனப்படும் ஒளியிழை வடங்களை பல நாடுகள் அமைத்துள்ளன. இவற்றின் மொத்த நீளம், 1 கோடி கி.மீட்டர்!

இந்த இழைகள், மனித அலைபேசிக் குரல் மற்றும் இணைய தகவல் தரவுகள் அனைத்தையும், சில வினாடிகளில் கண்டம் விட்டு கண்டம் கடத்திச் சென்று தருகின்றன.

ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இந்த கட்டமைப்பின் உதவியோடு, கடலடி யில் ஏற்படும் நிலநடுக்க அறிகுறிகளை உடனடியாக அறிய, விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

கடலடி நிலநடுக்கத்தின் தொடர் பாதிப்பாகத் தான், 'சுனாமி' அலைகள் உருவாகி, கரையோர வாழிடங்களில் உள்ள மக்களுக்கு பேரிடர் ஏற்படுகிறது.

சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடலுக்கடியில், 20 கி.மீ., தொலைவுக்கு போடப்பட்டிருந்த ஒளியிழை வடத்தின் மீது, நில அதிர்வுகளை அளக்கும் சோதனையை மேற்கொண்டனர்.

வெறும் நான்கே நாட்கள் நடந்த இந்த சோதனையில், 3.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை உடனே கண்டறிய முடிந்தது.

'சயன்ஸ்' ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சியை அடுத்து, உலகெங்கும் உள்ள கடலடி ஒளியிழை வடங்களின் நெட்வொர்க்கை, நில அதிர்வு எச்சரிக்கைக்கு செம்மையாக பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு முன், வடங்களின் மீது, நில அதிர்வை அளக்கும் கருவிகளை பொருத்துவது, இணைய அலைபேசி தகவல்களை பாதிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Karthik - Doha,கத்தார்

    //வடங்களின் மீது, நில அதிர்வை அளக்கும் கருவிகளை பொருத்துவது, இணைய அலைபேசி தகவல்களை பாதிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.// பாதிக்காது. ஒளி வடங்கள், ஒளி சமிக்ஞைகளைக் கடத்துகின்றன. ஆனால், அதிர்வை அளக்கும் கருவிகள், அதிர்வை ஆற்றல் சமிக்ஞைகளாகக் கடத்தும். அதை மறுபடியும் ஒளி சாமிக்குகைகளாக மாற்றி ஒளி வடங்கள் மூலம் அனுப்பலாம். அதனால் இரண்டுக்குமே பாதிப்பில்லை. விமானத்தில் உள்ளக கருப்பு பெட்டிப் போல் பாதுகாப்பான முறையில் கடலுக்கடியில் நிறுவ வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement