Advertisement

கண்களாவது வாழட்டும்

nsimg2426405nsimg
ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து அளவில்லாத சோகம் ஏற்பட்ட போதும் அந்த சோகத்தையும் தாண்டி மனித நேயத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கான சாட்சிதான் செல்வராஜ்.nsmimg735172nsmimgகோவை மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்படன் லே அவுட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்த 17 பேர்களின் பட்டியலில் கல்லுாரி மாணவி நிவேதிதாவும்,பள்ளி மாணவன் ரங்கநாதனும் உண்டு.
இவர்கள் இருவரும் டீ கடை ஊழியர் செல்வராஜின் பிள்ளைகள்.செல்வராஜின் மனைவி சமீபத்தில்தான் இறந்தார் அவரது இறப்புக்கு பிறகு தந்தையாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் இருந்து இரண்டு பேரையும் வளர்த்து படிக்கவைத்து வந்தார்.
இந்த நிலையில்தான் இவரது பிள்ளைகள் சுவர் இடிபாடுகளில் சிக்கினர் இவர் டீகடையில் வேலையில் இருந்ததால் உயிர் பிழைத்தார், ஆனால் நான் போயிருந்தால் கூட பராவாயில்லை வாழவேண்டிய என் சிறு பிள்ளைகள் இறந்துவிட்டனரே என்றுதான் செல்வராஜ் அழுதார்.
ஆஸ்பத்திரியில் இரண்டு பிள்ளைகளும் உயிருக்கு போராடி தோல்வியை தழுவினர் இருவரும் இறந்த தகவல்களை கேட்ட தலையில் இடிவிழுந்தது போல செல்வராஜ் அதிர்ந்து போனார் அந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளின் கண்களை தானம் செய்தால் இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை உணர்ந்து இருவரின் கண்கையும் தானம் செய்தார், அரசு மருத்துவமனை மூலம் கண்தானம் செய்யப்பட்டது.
செல்வராஜ் போன்ற அதிகம் படிக்காதவர்களுக்கு கண்தானம் பற்றி புரியவைக்க சிரமப்பட வேண்டியிருக்கும் அதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்,பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி தயங்கி தயங்கியே மருத்துவர்கள் செல்வராஜிடம் கேட்டனர் ஆனால் செல்வராஜோ கொஞ்சமும் தயங்காமல் என் பிள்ளைகளின் கண்களாவது வாழட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி எல்லோர் மனதிலும் உயர்ந்துவிட்டார்.
--எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vishnu -

    Great person

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இவர் மரியாதையுடன் வாழ என்னால் முடிந்த பண உதவி மட்டும் செய்யமுடியும். இவருக்கு உதவுவதற்கு எனக்கு உதவுங்களேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement