Load Image
Advertisement

பத்மாவதி தயாருக்கு புஷ்பாபிேஷகம்


திருப்பதி திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தயாருக்கு பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக புஷ்பத்தால் அபிேஷகம் செய்யப்பட்டது.மேல்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலையில் சீனிவாசப்பெருமாள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல சீனிவாசப்பெருமாளின் பிராட்டியரான பத்மாவதி கீழ் திருப்பதி எனப்படும் திருப்பதி திருச்சானுாரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


திருமலையில் நடப்பது போல இங்கும் கடந்த ஒன்பது நாட்களாக பிரம்மோற்சவம் நடைபெற்றது நாள்தோறும் விதம் விதமான வாகனங்களில் தாயார் எழுந்தருளினார் நகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று பத்மாவதி தயாருக்கு நான்கு டன் எடையுள்ள ரோஜா, முல்லை, மல்லி, கனகாம்பரம் என்று பதினான்கு வகையான மலர்களால் அபிேஷகம் செய்யப்பட்டது இந்த புஷ்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in





வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement