Advertisement

ரியல் எஸ்டேட் துறை வளரும் அறிகுறி

Share

வேலைவாய்ப்பு மற்றும் வளத்தைப் பெருக்க, ரியல் எஸ்டேட் துறை மீண்டு வர மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்திருப்பது வீடு வாங்க காத்திருப்போரின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பிரதமர் மோடி அரசு சில விஷயங்களில் அதிக கெடுபிடியுடன் செயல்படுகிறது என்பது உண்மை. அது அடுத்த சில ஆண்டுகளில் எந்த அளவு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதே இன்றைய கேள்வி.

ஏனெனில் பல ஜனநாயக நாடுகள் தங்களது வர்த்தக மேம்பாட்டைப் பெருக்க இரு நாடுகளிடையேயான ஒப்பந்தங்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒப்பந்தம் என்ற நடைமுறைகளை ஏற்படுத்தி வரும் காலம் இது. ஆகவே நம் வாங்கும் சக்தி அல்லது தேவைக்கு ஏற்ற சப்ளை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய காலம் மட்டும் அல்ல. நம் தயாரிப்புகள் உலக அளவில் சிறப்பாக இல்லாத பட்சத்தில் அதை சந்தைப்படுத்த முடியாது.

அவற்றைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி உத்திகளை சில விஷயங்களில் புதிதாக அணுக வேண்டும் என்பது இன்றைய இந்தியாவின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டது. ஆனால் இவை எப்போது பயனளிக்கும் என்பதற்கு மொத்த வளர்ச்சி ஒரு அறிகுறி என்றால் அது என்று சீராகும் என்ற விவாதம் தொடரும். ஆனால் செயல்படும் நிர்வாகம் ஊழல் தவிர்ப்பு ஆகியவை முன்னிறுத்தப்படும் போது அதற்கான நிர்வாகத்தை பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் உயர் அதிகாரிகள் பணி இனி அலசப்படும்.

அது ஒரு புறம் இருக்க ரியல் எஸ்டேட் துறை என்பது கரன்சி மதிப்பிழப்பை மத்திய அரசு அமல்படுத்தியதும் சரிவைக் கண்டது. அத்துடன் வீடு கட்ட முன்பணம் கொடுத்து காத்திருப்பவர்கள் காலம் காலமாக எவ்வித பிடிப்பும் இல்லாமல் வீடுகளை பெற முடியாத துயரமும் இருந்தது. ஆனால் அதைக் கையாள எளிதாக அத்துறைக்கான சட்டங்கள் பினாமி சொத்துரிமை என்ற மோசடி தவிர்ப்பு ஆகிய அனைத்தும் இத்துறையை கலங்கடித்தது.

'இன்சால்வன்சி' என்னும் திட்டத்தால் அப்படியே முடங்கிய வீட்டு கட்டுமான நிறுவனங்களை புதிதாக உயிர்ப்பிக்க மத்திய நிதியமைச்சரகம் இப்போது எடுத்த முடிவு இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைப்பதுடன் இத்துறையில் லட்சக்கணக்கான வேலையாட்கள் பயன் பெறவும் உதவும்.

மத்திய தர வருமானப் பிரிவினர் மற்றும் அதற்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் இதன் பாதிப்பில் அதிகம் சிரமப்பட்டனர். அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. வாங்கிய வங்கிக் கடனைக் கட்டுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த வீடுகளை கட்டும் 'புரோமோட்டர்'கள் வாராக் கடன் பிடியில் இருப்பதால் பணிகளை முடக்கும் நிலை ஏற்பட்டது.

இது ஒரு புதிய பிரச்னை. மத்திய அரசு இத்தொழிலை ஸ்தம்பிக்க வைத்ததாக எழுப்பப்பட்ட புகாருக்கு இந்த தடவை மத்திய பட்ஜெட்டில் விளக்கமும் இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பல குறைகளை தவிர்க்க பிரதமர் மோடி ஆலோசனையில் மேற்கொண்ட ஆய்வுகள் இப்போது முதற்கட்ட பலன்களை தரக்கூடும்.

தமிழகத்தில் சென்னை கர்நாடகாவில் பெங்களூரு உட்பட பல நகரங்களில் 1.5 கோடி ரூபாய் விலை வரை உள்ள வீடுகளை வாங்குவோர் இனி சற்று ஆறுதல் அடையலாம். இதில் பலர் தனியார் மற்றும் பல நிறுவனங்களில் வீட்டுக் கடன் வாங்கி மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக அடைக்கலாம் என்று கருதி மேற்கொண்ட முயற்சியில் பாதிக்கப்பட்டோர் புத்துயிர் பெறலாம். சிறிய நகரங்களில் 1 கோடி ரூபாய் வரை வீடு வாங்குவோர் பலன் அடைவர்.

நாடு முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாயை தரும் வகையிலான இத்திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் பல்வேறு வங்கிகள் உதவும். அதே சமயம் ஏற்கனவே உள்ள வாராக்கடன் அல்லது மற்ற சட்டச் சிக்கல் மோசடிகளை கொண்ட கட்டுமான நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. பழைய கடனைக் கட்ட அல்லது வேறு சட்ட சிக்கல்களில் இருந்து வெளிவர ரிசர்வ் வங்கி அல்லது எல்.ஐ.சி. நிதி உதவி என்பது இத்திட்டத்தில் கிடைக்காது. இத்திட்டத்தில் புரோமோட்டர் என்பவர் அதிக மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த பணப் பட்டுவாடா மூலம் பயன் வரும்போது

சிமென்ட் ஸ்டீல் என்ற உருக்கு செங்கல் தயாரிப்பு தொழில் ஆக்கம் உட்பட பல விஷயங்கள் அதிகரித்த தேவையுடன் இயல்பான நிலை வருகிறதா என்பதை இனி அடையாளப்படுத்த வேண்டும். அத்துடன் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் செயல்படும் நடைமுறை அதிக கடன் வசதிகளை இயல்பான வட்டி விகிதத்தில் தர நடவடிக்கை பற்றிய நிதியமைச்சக அணுகுமுறையும் தேவை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement