Advertisement

'ராஜாமணி நல்லா இருக்கணும்!'

Share

கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த தரணியா என்ற இளம்பெண், 'குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட எனக்கும், என் இரு குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். தற்கொலை முடிவெடுத்த என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றியதுடன், 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் மீட்டுக் கொடுத்த கலெக்டர், என் கடவுள்' எனக்கூறி கண்ணீர் மல்க, கலெக்டர் ராஜாமணிக்கு சால்வை அணிவித்து, நன்றி தெரிவித்தார்.

தரணியாவுடன் வந்திருந்த, வயது முதிர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர், 'நீங்க நல்லாயிருக்கணும். மேன்மேலும் உயர்ந்து பெரிய பதவிக்கு வர வேண்டும்' என்று, கூட்டத்திலேயே கலெக்டரை வாயார வாழ்த்தினார்.

கூட்டத்தில் இருந்தவர்கள், 'இது போல ஒரு சில நல்ல கலெக்டர்கள் தான் தமிழகத்தை நிமிர்த்தி வைக்கிறாங்க...' என, கருத்து பகிர்ந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement