Advertisement

டிரோன் நல்லது

Share

டிரோன் தொழில்நுட்ப ரீதியாக,ஆளில்லாத விமானம் என்று அழைக்கப்படுகின்றன.ரிமோட் மூலம் இதனை கட்டுப்படுத்தி பறக்கவிடலாம் பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் இந்த டிரோன்கள் பறந்து பறந்து படம் எடுப்பதை பார்த்து இருக்கலாம்.ஆனால் டிரோன்களி்ன் பயன்பாட்டில் அதுவும் ஒன்றே தவிர அது ஒன்று மட்டுமே அல்ல.
விஞ்ஞான உலகத்தில் அனைவரும் சிறகடித்து பறந்து வருகிறோம். எதையும் விரைவாக முடித்து சுலபமாக கையாளும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்த விரிந்து கிடக்கிறது இந்த தொழில்நுட்பத்திற்கு தற்போது பெரிதும் கைகொடுப்பது டிரோன்கள்தான்.
இதன் காரணமாக வெளிநாடுகளில் டிரோனின் தேவையும்,சேவையும் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது.பேரிடர் மீட்பு காலத்திலும்,தேடுதல் பணியிலும்,கண்காணிப்பு பணியிலும் டிரான்களின் சேவை மகத்தானது.
அது ஒரு உபயோகமான கருவி என்ற புரிதல் இல்லாமல் அதை ஒரு ஆயுதமாக பார்க்கும் பார்வையே இந்தியாவி்ல் உள்ளது இந்த நிலை மாறவேண்டும் என்கிறார் டிரோன்கள் பயன்படுத்தும் சென்னை சாஜன் சுந்தர்.
சாஜன் சுந்தர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மலேசியாவில் விமானம் ஒட்டும் பைலட் பயிற்சியும்,லண்டனில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மெயின்டென்ஸ் பயிற்சியும் பெற்றவராவார்.
தற்போது சென்னையில் ‛ஸ்பேரோ ஹோல்டிங்ஸ் ஏரியல்ஸ்' என்ற நிறுவனம் நடத்திவருகிறார் இதன் மூலம் முறைப்படி டிரோன்களை பயன்படுத்தி போட்டோ,வீடியோ எடுத்து தந்துவருகிறார்.
ஒரு நல்ல விஷயத்தை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு அதை முற்றிலும் அழித்து விடுவது என்பது இன்றைய விஞ்ஞான வாழ்க்கைக்கு சரியாக இருக்காது டிரோனைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட சூழல்தான் நிலவுகிறது.
மலேசியாவில் விமான நிலையம் போன்ற சில இடங்கள் தவிர எந்த இடத்திலும் டிரோன்களுக்கு தடை கிடையாது பொதுமக்கள் பட்டம் விடுவது போல டிரோன்களை பத்துமலை முருகன் கோவில் பகுதியில் பறக்கவிட்டு படம் எடுப்பர்.
இலங்கையில் டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில்நுட்ப பயன்பாடு கிடுகிடுவென வளர்ந்து இருக்கிறது.
சீனாவில் மருத்துவத்துறையில் டிரோன்களின் உதவி அபாரமாக உள்ளது அவர்கள் டிரோனை ஆம்புலன்ஸ் அளவிற்கு மாற்றி உபயோகிக்கும் ஆராய்ச்சியில் உள்ளனர்,விவசாய நிலத்திற்கு மருந்து தெளித்தல் உள்ளீட்டவற்றுக்கு டிரோன்கள்தான் பயன்படுத்துகின்றனர்.
டிரோன்கள் தயாரிப்பிலும் இப்போது பல முன்னேற்றம் உள்ளது விமான நிலையம் உள்ளீட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் டரோன்கள் இப்போது பறக்காது அந்த அளவிற்கு புரோகிராம் செய்யப்பட்டு உள்ளது.எதன் மீதும் மோதாது, எந்த சூழ்நிலையிலும் கிழே விழாது பேட்டரி தீர்தல் உள்ளீட்ட எதிர்பாரத பிரச்னை வந்தால் கிளம்பிய இடத்திற்கு பத்திரமாக உடனே திரும்பிவிடும் இப்படி பல முன்னேற்றங்கள் இப்போது பறக்கவிடும் டிரோனில் வந்துள்ளது.
இங்கே கூட சென்னையில் வெள்ளம் பாதித்த போது அதன் பாதிப்பு எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்பதை வெளிப்படுத்த டிரோன்களில் எடுத்த புகைப்படங்கள்தான் பயன்பட்டது.இந்த படங்கள்தான் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து மாநிலத்திற்கு அதிக நிதியையும் பெற்றுத்தந்தது.
இப்படி இவ்வளவு நன்மை செய்யும் டிரோனை வில்லத்தனமான பொருளாக பார்க்கும் பார்வை மாறவேண்டும் என்னைப் போன்ற படித்தவர்கள் இதைச் செய்யும் போது அவர்களுக்கு அங்கீகாரம் கொடு்க்கலாம் அவர்களைக் கொண்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றவர் டிரோன் தவிர்க்கமுடியாத தவிர்க்ககூடாத அற்புதமான ஒரு விஞ்ஞான சாதனம் இதனை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது என்று கூறி முடித்தார்.அவரது போன் எண்:9789949906.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அமெரிக்காவில் கூரியர் வேலைக்கும் உணவு டெலிவரி செய்யவும் கூட டிரோன் பயன்படுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement