Advertisement

'டவுட்' தனபாலு

Share

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கல்லிலும், முள்ளிலும் நடந்து, கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு, துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து, மக்கள் தரும் பதவிகளை அடைந்தவர்களுக்குத் தான் பக்குவம் வரும். அமைச்சர் பாண்டியராஜன், இந்த வகையில் சேர மாட்டார். தியாகம் என்றால் என்னவென்று அவருக்கு தெரியாது. அவரை மறப்போம்; மன்னிப்போம்!

'டவுட்' தனபாலு: வண்டியை ரொம்ப தான், வேகமாக ஓட்டுறீங்க... நீங்க எந்த ஊருக்கு கள்ளிலும், முள்ளிலும் நடந்தீர்கள்... கல்லடி பட்டீர்கள்? உங்கள் தந்தை கருணாநிதி போட்டுத் தந்த ரோஜா மலர் பாதையில் நடந்து, கட்சியின் தலைவராக ஆகியுள்ளீர்கள்.


***

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: எங்கள் கட்சியின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். விஜயகாந்தின் பிரசாரம், மக்கள் மனதில் பெரிய அளவில் செல்லும். 'எனக்காக ஒரு நாள் விடியும்' என்பது அவர் கூற்று. அதற்கான நேரமும், சூழ்நிலையும் நிச்சயம் உருவாகும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கட்சியின் பலம் என்ன என்பது, விஜயகாந்துக்கும், உங்களுக்கும் தான் தெரியும் என்பதில், 'டவுட்'டே இல்லை. விஜயகாந்த் பிரசாரத்திற்கு சென்றால், ஓட்டுகள் கிடைக்கும் என்பது உறுதி தான். ஆனால், அவரால் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, ஓட்டு சேகரிக்க முடியுமா என்பதே, இப்போதைய நிலையில், 'டவுட்' ஆக உள்ளதே!


****


பத்திரிகை செய்தி: அமெரிக்காவுக்கு, பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, அவரின் வீட்டுக்கு சென்ற, முதல்வர், இ.பி.எஸ்., பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என, வாழ்த்து கூறினார்.

'டவுட்' தனபாலு: அமெரிக்க சுற்றுப்பயணத்தின் நெளிவு, சுளிவுகளை, துணை முதல்வருக்கு, முதல்வர் சொல்லிக் கொடுத்திருப்பார். அதுபோல, கோட், சூட், டை அணிவது எப்படி என்பதையும் கூறியிருப்பார். அதே நேரத்தில், 'இத்தனை நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க வரவுள்ளன என்ற புள்ளிவிபரத்தை, நான் சொன்னது போல, சொல்லி மட்டும் மாட்டிக் கொள்ளாதீர்கள்...' என, அன்புக் கட்டளையும் இட்டிருப்பாரோ என, எனக்கு, 'டவுட்' வருகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவர் குடும்பம் எந்த காலத்தில் கஷ்டப்பட்டது பேசுவது கொஞ்சமாவது நியாயமிருகனும் மனசாட்சியே இல்லாத ......

  • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

    திருட்டு ரயில் பயணம் செய்து, கொச்சை தமிழ் வார்த்தைகளை சொல்லி, அதர்க்கு என ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் நாகரிகத்தை சீரழித்த இந்த குடும்பன் வந்த பாதை உலகமே அறியும் எந்த தொழில் செய்து உலக மகா பணக்காரன் ஆனீர்கள்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரையும் ஈந்த ஒரு குமரனோ, பகத்சிங்கோ, வாஞ்சிநாதனோ படாத பாடும், செய்யாத தியாகமும் இவர் என்ன செய்துவிட்டாராம்? அவர்களின் வாரிசுகள், குடும்பங்கள் சிறிதாவது பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டிருப்பார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement