Advertisement

ஸ்டாலின் பதிலுக்கு ஸ்ரீநிவாசன், 'டென்ஷன்!'

மதுரையில், நிருபர்கள் சந்திப்பில், பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீநிவாசன், 'சென்னை, 'முரசொலி' அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்தது குறித்து, தி.மு.க., ஸ்டாலின் கருத்துக்கு பதிலளிக்க வந்துள்ளேன்' என்றார். அவரிடம், 'வெறும் அரசியல் சலசலப்புக்காக தான், பஞ்சமி நில விவகாரத்தை கையில் எடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரோ' என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

ஆவேசம் அடைந்த ஸ்ரீநிவாசன், 'முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் இருப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர், ஏற்கனவே குற்றம் சாட்டியிருக்கின்றனர். 'தற்போது, அரசியல் லாபங்களுக்காக, அவர்கள் வாய் மூடி மவுனமாக உள்ளனர். திருமாவளவன் ஏற்கனவே இக்குற்றச்சாட்டை தெரிவித்தது, அரசியல் சலசலப்புக்காக தானா... அவருக்கு ஒரு நியாயம்; எனக்கொரு நியாயமா' என, நிருபர்களிடம் பாய்ந்தார்.

மூத்த நிருபர் ஒருவர், 'பஞ்சமி விளக்கம் அளிக்க வந்தவரிடம், இப்படி கேள்வி கேட்டா தப்பா...' எனக் கேட்க, மற்றவர்கள் ஆமோதித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement