Advertisement

'சமயம் கிடைச்சா பந்தாடிடுவாரு நேரு!'

அமெரிக்க மனிதநேய சங்கம் சார்பில், தி.க., தலைவர் வீரமணிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதை பாராட்டி, திருச்சியில் விழா நடத்தப்பட்டது. தி.மு.க., கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்றனர்.

இதில், தி.மு.க., சார்பில், பங்கேற்ற முன்னாள் அமைச்சர், கே.என். நேரு, 'அ.தி.மு.க.,வினர், திமு.க., தலைவர் ஸ்டாலினை அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர். அதை கூட்டணி கட்சிகள் என்ற முறையில், யாரும் தட்டி கேட்காமல், அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க., அமைச்சர்கள் பலரும், உளறலாக தான் பேசுகின்றனர். அவர்கள் பேச்சையும், கூட்டணி கட்சியினர் ரசிக்கின்றனர்' என்றார். இதைக் கேட்ட, மேடையில் இருந்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் நெளிந்தனர்.

தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'ஒரே மேடையில் சந்தர்ப்பம் கிடைச்சா, கூட்டணி கட்சிக்காரங்களை நார் நாரா கிழிக்கிற வழக்கம் நேருவுக்கு உண்டு... ஆனா, தலைமை இவரை ஒதுக்கி வச்சிருக்கு... தலைவர் ஸ்டாலின் உளறும் உளறலுக்கு, இவர் தான் சரியான பூசணிக்காய்...' எனக் கூற, மற்றவர்கள் கமுக்கமாகச் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நாளைக்கு நீங்க துரதிட்டாங்கன்னா அதிமுக கிட்டேதானேபோய் சீட் பிச்சை கேட்கணும் அதனாலேதான் வாயை மூடிட்டு ஹீ ஹீ ஹி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement