Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக காங்., தலைவர் அழகிரி: தி.மு.க., கட்சி பத்திரிகையான, 'முரசொலி' அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி எனப்படும், தலித் மக்களுக்கான இடம் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களை ஸ்டாலின் காட்டியதை அடுத்து, ராமதாஸ் கூறியது, பச்சைப் பொய் ஆகி விட்டது.

'டவுட்' தனபாலு: நீங்கள் கூறுவது தான், மஞ்சள் பொய்யாக இருக்கிறது. ராமதாஸ் ஆதாரம் கேட்டதும், பட்டாவை வெளியிட்டார் ஸ்டாலின்; மூல பத்திரத்தை இன்னும் வெளியிடவில்லை. அதுபற்றி கேட்டதற்கு, தகுந்த நேரத்தில் வெளியிடுவோம் என்றார். இதை அறிந்தும் அறியாதது போல, கூட்டணி கட்சியை காப்பாற்ற, அறிக்கை வெளியிட்டுள்ளீர்களோ என்பதே என், 'டவுட்!'

***

பத்திரிகை செய்தி: தி.க.,வை நிறுவிய, ஈ.வெ.ரா.,வின் பகுத்தறி புயல், தமிழகம் முழுவதும் வீசிக் கொண்டிருந்த போது, ஹிந்து மதத்தின் காவல் தெய்வமாக விளங்கியவர், மறைந்த கிருபானந்தவாரியார். நாத்திக வாதிகளுக்கு அவர், சுடச்சுட அளிக்கும் பதில்கள் அருமையாக இருக்கும். நெற்றியில் விபூதி பூசியதை கிண்டல் செய்த ஒருவரை, 'நல்ல வீட்டுக்குத் தான் வௌ்ளை அடிப்பர். குட்டிச்சுவருக்கு அடிக்க மாட்டார்கள்' என, பதிலளித்தவர் அவர்!

'டவுட்' தனபாலு: வாரியார் சுவாமிகள் போன்ற உண்மையான பகுத்தறிவாளர்கள், இப்போது இல்லை. இப்போது இருக்கும் ஆன்மிகவாதிகள், சொற்பொழிவாளர்கள் பலரும், பணத்தின் மீதே குறியாக இருக்கின்றனர். பதிலடி கொடுக்க ஆள் இல்லாததால் தான், திராவிட இயக்கங்கள் என்ற போர்வையில், வாய்க்கு வந்ததை எல்லாம் சிலர் பேசி வருகின்றனரோ என்பதே என், 'டவுட்!'

***

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: வழக்கமாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காயம் விலை அதிகமாகத் தான் இருக்கும். இப்போது பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. எங்கள் நடவடிக்கையால், சில நாட்களாக, விலை குறைந்து வருகிறது. 2010ல் தி.மு.க., ஆட்சியின் போது, 1 கிலோ வெங்காயம், 150 ரூபாய் வரை விற்றது.

'டவுட்' தனபாலு: ஒவ்வோர் ஆண்டும், நவம்பர், டிசம்பரில், வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்றால், அந்த மாதங்களில், அதிக வெங்காயத்தை புழக்கத்தில் விட்டால், விலை குறையுமே... இதை உங்கள் அரசு செய்யத் தவறியது ஏன்... தி.மு.க., ஆட்சி காலத்தில், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறுவது, தமிழக அரசின் தோல்வி என்பதை, 'டவுட்' இல்லாமேயே தெளிவாக உணர்த்துகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  காங்கிரசின் அழகிரி சுடலையின் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவார் என்று சொல்லி வந்தனர் அவருடைய ஆதரவாளர்கள் ....... ஆனால் அவரோ (அல்லக்கைகிரியோ) ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக இருக்கிறார் ......

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திமுகத்தலைவர் எது சொன்னாலும் அவர்கள் கட்சியினருக்குமுன்னே ஆமாம் சாமி போடக்கூடியவர் அழகிரியார் என்பது உலகறிந்த விஷயமாச்சே ஐயா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பகுத்தறிவு பிரச்சாரம் என்று சொல்லப்படும் ஹிந்துமத எதிர்ப்பு மிகத்தீவிரமாக இருந்தகாலத்தில் ஆன்மீக மேடைகளில் வாரியார் சாமிகள் பாலகிருஷ்ணா சாஸ்திரிகள் புலவர் கீரன் போன்றோர் ஆன்மீக மேடைகளிலும் திரைத்துறையில் சிவாஜி கணேசன் எ.பி நாகராஜன் போன்றோர் புராண படங்களை எடுத்து மக்களின் மனதில் தெய்வநம்பிக்கையை அழியாமல் பார்த்துக்கொண்டனர் என்பது இன்றய இளைஞர்களுக்கு தெரியாத விஷயம் அதிலும் சிவாஜி நாகராஜன் கூட்டணியில் உருவான புராண திரைப்படங்கள்தான் அன்றய சிறுவர்களாக இருந்த எங்களுக்கு ஹிந்து தெய்வங்களைப்பற்றி மிக எளிதில் அறியும்படி உதவியாக இருந்தது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திமுகத்தலைவர் எது சொன்னாலும் பண்டரிபுர இருப்பவர் அழகிரி ( இந்தியாவின் மிகப்பெரிய பண்டரிபுராக்கோவிலில் உள்ளதாக படித்துள்ளேன் )

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மை இப்போதிருக்கும் இந்து சமயத்தலைவர்கள்என்பவர்கள் காசில் மட்டுமே குறியாகவுள்ளனர் என்பதே கசக்கும் உண்மையாகும்

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  இவனொருத்த என்கிட்ட நாலு இருக்கு மடியே புடி.. என்கிற கணக்கிலே போன போக்கிலே ஏதாவது ஒளறிக்கிட்டு இருக்கு

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  மூல ஆவணமே போலியாக தயாரிப்பதில் புகழ் பெற்றவர்கள் இந்த திமுக ஆட்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?.....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஒவ்வொரு ஆட்சியிலும் பிரசினை கொடுக்க பருப்பு, எண்ணெய் , வெங்காயம் ஏதாவது ஒன்று இருக்கும் இதில் வெங்காயம்தான் ‘கதா நாயகன்’

 • Mannar Nagarathinam - Ramanathapuram,இந்தியா

  மூல ஆவணம் இல்லாமல் பட்டா தருவார்களா தமிழக அரசில்???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement