Advertisement

அங்கோர் வாட் அழைக்கிறது.

nsimg2406318nsimgஅங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.
nsmimg728843nsmimgஇது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டில் யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது.
nsmimg728844nsmimgஇக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.

nsmimg728846nsmimgதோராயமாக ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இப்பேரரசு செழித்து இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மிகப்பெரிய நகரமாக விளங்கிய இந்நகரத்தில் 1010 முதல்1220 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த உலக மக்கள் தொகையில் 0.1% மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றும் கருதப்படுகிறது.அப்பொழுது இரண்டாம் செயவர்மன் தானே உலகளாவிய மன்னன் என்றும் மன்னர்களுக்கெல்லாம் தானே கடவுள் என்றும் அறிவித்து 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1351 ஆம் ஆண்டு அயூத்தியா இராச்சியம் தலையெடுக்கும் வரை ஆட்சி புரிந்துள்ளார்.
கெமெர் கட்டிடக் கலைக்குச் சான்றாக மிக முக்கியமான தளமாகவும் உள்ளது. யுனெசுகோவின்வினால் உலகப் பாரம்பரியக் களம் என்று பாதுகாக்கப்படும் அங்கோர் வாட் மற்றும் அங்கோர் சின்னங்கள் உள்ளிட்ட பரந்த பரப்பை ஆண்டுதோறும் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர். இத்துணை சிறப்பு வாய்ந்த அங்கோர் வாட்டை சுற்றிப்பார்க்க இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி அழைக்கிறது.
சென்னையிலிருந்து உலகின் மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட்,கம்போடியா-வியட்நாம்,தாய்லாந்து செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது
.எட்டு இரவு ஒன்பது பகல் கொண்ட இந்த சுற்றுலாவிற்கான கட்டணம் 1லட்சத்து 22ஆயிரத்து 500 ரூபாயாகும்.3 ஸ்டார் ஒட்டல் வசதியுடன் கூடிய இந்தப்பயணம் வருகின்ற 22 ந்தேதி துவங்குகிறது.விவரத்திற்கு 8287931972 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    நன்றி , தமிழில் எழுதுகிறேன் என்று அந்த மக்களின் பெயரை மாற்றி எழுத நமக்கு எப்படி வருகிறது ? அது சரிதானா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement