வீணாகும் பிளாஸ்டிக் குப்பைகள், விரயமாகும், கிரானைட் சில்லுகள் போன்றவற்றை வைத்தே, உறுதியான கட்டடப் பொருட்களை படைக்கிறது, மைசூரைச் சேர்ந்த ஜக்ருத் டெக்.மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கை, செங்கல் மற்றும் நடைபாதை கற்களாக வடிக்கிறது ஜக்ருத்.
இதன் நிறுவனர்கள், மைசூருக்கு அண்டை மாவட்டங்களில் மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகளிடமிருந்து பிளாஸ்டிக் மற்றும் கிரானைட் போன்றவற்றை சேகரித்து, தனது ஆலையில் அவற்றை செங்கற்களாக வடிக்கிறது. இந்த பிளாஸ்டிக் கற்கள், 21 டன் எடையையும், 120 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவை.
இந்த பொருட் களை உருவாக்க சிமென்ட் சிறிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பை மேடுகள் விரைவில் தரைமட்டமாவதற்கும், சுற்றுச் சூழல் மாசினை உருவாக்குவதை தடுப்பதற்கும், ஜக்ருத் போன்ற புதுமை அமைப்புகள் நமக்கு நிறையத் தேவை.
பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்!
வாசகர் கருத்து (5)
-
-
பிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் நன்றாக பிடிக்கும்.பிளாஸ்டர் செய்யலாம். நீண்டநாள் வரும். பிளாஸ்டிக் மணல் தயாரித்தல் நமக்கு மணல் தேவை இல்லை. அது நமக்கு செலவையும், நீண்டநாள் உழைப்பு மற்றும் அரிப்பு இல்லாமல் இருக்கும். பிளாஸ்டிக் தடைசெய்ய தேவை இல்லை . நலன்
-
அருமை அருமை
-
பிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் பிளாஸ்ட்ர் செய்ய முடியுமா.
-
நல்ல கண்டுபிடிப்பு
ஒரு விதத்தில் இது நல்லதுதான், ஆனால் ஏதோ ஒரு விபத்தில் வீட்டில் தீ பிடித்தால், இதுவும் சேர்ந்து எரிந்து தீயை அதிகமாக்குமா, தீ அணைப்பதை சிரமமாக்குமா என்பதையும் யோசிக்க வேண்டும், இது எரியாமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா என்றும் பார்த்தால் மிக நல்லது