Advertisement

'நல்ல தலைவரை அடையாளம் காட்ட முடியலியே...!'

இ.கம்யூ., மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்தார். நிருபர்களிடம், அவர், 'திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழக அரசும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். பா.ஜ., வள்ளுவருக்கு காவி உடை உடுத்தி, இணையதளங்களில் பிரசாரம் செய்கிறது. இதை, இ.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது.

'அரசியலில், தன் நிலை என்ன என்பதை, ரஜினி கூற வேண்டும். ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இருப்பது, அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். ரஜினி அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்பது, அவருக்கே தெரியவில்லை. இந்த நிலையில், பா.ஜ., அரசு, அவருக்கு சிறந்த கலைஞருக்கான விருதை வழங்கி இருக்கிறது. தமிழகத்தில், நேரடியாக காலுான்ற முடியாத, பா.ஜ., ரஜினி தோள் மீது ஏறி உள்ளே வர முயற்சிக்கிறது' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'இதுவரை, ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண முடியாத கம்யூ.,காரருக்கு, இந்த, 'அலம்பல்' தேவையா...' எனக் கூற, மற்ற நிருபர்கள், 'அதானே...' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • oce - kadappa,இந்தியா

    தமிழகத்தை ஆள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நல்ல தலைவர் இல்லையா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement