Advertisement

ஓட்டல் தொழிலில், 'பிசி'யான காமெடி நடிகர்!

Share

''ஒரு விழாவுக்கு வரணும்ன்னா, 'பங்சுவாலிட்டி' பார்க்கணுமா இல்லையா...'' என்ற படியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அந்தோணிசாமி.

''யாரு பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்புல, ஒரு நாள் மாநாடு, சமீபத்துல சென்னையில நடந்துச்சு... இதுல, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துக்கிட்டாருங்க...

''விழாவுக்கு, அமைச்சர் லேட்டா வந்தாரு... கூட்டமைப்பு சார்புல யாரும் இதைப் பெரிசா எடுத்துக்கலீங்க...

''ஆனா, கலந்துக்கிட்டவங்களுக்கு கொஞ்சம் அதிருப்தி... 'நாம முன்னேறணும்ன்னா, நேரம் தவறாமை முக்கியம்... அரசியல்வாதிங்கல்லாம், நேரம் தவறாமையைக் கத்துக்கிட்டாங்கன்னா நல்லா இருக்கும்'ன்னு புலம்பினாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''எங்களிடம் இருந்து ஆரம்பிங்க... எல்லாம் ஜெயமா முடியும்னு, கொளுத்தி போட்டிருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அண்ணாச்சி.

''எதை, எங்க இருந்து ஆரம்பிக்கணுமாம் ஓய்...'' என விசாரித்தார், குப்பண்ணா.

''லோக்சபா தேர்தலப்ப, பா.ம.க.,வோட தான், அ.தி.மு.க., முதல்ல கூட்டணி ஒப்பந்தம் போட்டது... அந்தத் தேர்தல்ல, படுதோல்வி தானே கிடைச்சது..

''அதே நேரம், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலப்ப, ஆதரவு கேட்டு, முதல்ல விஜயகாந்த் வீட்டு கதவை தான், அமைச்சர்கள் தட்டுனாவ... இந்த ரெண்டு தொகுதியிலயும், அ.தி.மு.க., ஜெயிச்சிட்டுல்லா...

''இதனால, 'விஜயகாந்த் ரொம்பவே ராசியானவர்... அதனால, உள்ளாட்சி தேர்தல், சீட் பங்கீட்டையும் எங்களிடம் இருந்தே துவங்குங்க... அமோக வெற்றி கிடைக்கும்'னு, ஆளுங்கட்சி தலைமைக்கு, சுதீஷ் மூலமா பிரேமலதா தகவல் அனுப்பியிருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஓட்டல் தொழில்ல, 'பிசி' ஆகிட்டார் ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வெண்ணிலா கபடிக் குழு படத்துல, புரோட்டா சாப்பிட்டு, 'பேமஸ்' ஆனாரே, காமெடி நடிகர் சூரி... வடிவேலு மாதிரி இவரும் மதுரைக்காரர் தான் ஓய்...

''இவர், தன் சகோதரர்களோட சேர்ந்து, மதுரையில, 'அம்மன்' என்ற பெயர்ல, சைவ ஓட்டல்களை நடத்திண்டு இருக்கார்... இங்க, சாப்பாடு நன்னாவும், தரமாவும் இருக்கறதால, வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வரா ஓய்...

''ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல, சூரியே சப்ளையரா களமிறங்கிடறார்... சமீபத்துல, மதுரை ஏர்போர்ட் பக்கத்துல, 'அம்மன்' சைவ ஓட்டலையும், 'அய்யன்' அசைவ ஓட்டலையும், நடிகர் சிவகார்த்திகேயன் கையால திறக்க வச்சார்...

''இவரது ஓட்டல்கள்ல சமைக்கற உணவு பண்டங்கள்ல, ரசாயன கலர் பொடிகளை சேர்க்கறது இல்லை... இதனால, இங்க கூட்டம் அலைமோதறது ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''பாராட்ட வேண்டிய விஷயம் தானுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • A R J U N - sennai ,இந்தியா

    அதிமுக நெனச்சா ஒத்தன குடிகாரனு சொல்லி தூற்றுவார்கள்,அதே தங்களுக்கு சாதகமாக ஏதாவது நடக்குதல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர், காரியவாதிகள். சந்தர்ப்பவாதிகள்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முந்தைய தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள் சம்பாதித்ததை ஊதாரித்தனமாக, குடி போன்று செலவிட்டு தெருவில் நின்றனர். கையில் உள்ள தொழிலில் முதலீடு செய்து எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு செய்வது நல்லது பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement