Advertisement

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்சில், பிளாஸ்டிக் குப்பைக்கு, அரிசி வழங்கப்படுகிறது. நம் நாட்டின் தெலுங்கானா மாநிலத்திலும், எடைக்கு எடை அரிசி வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் செய்தால், பிளாஸ்டிக்கை ஒழித்து விடலாம்.

'டவுட்' தனபாலு: அங்கெல்லாம் சரி, நம்ம மாநிலத்தில் சரிப்பட்டு வராது. ஏனென்றால், அரிசி வரும் பை; அதை வாங்க வரும் மக்கள் கொண்டு வரும் பை எல்லாம் பிளாஸ்டிக்காகவே உள்ளன. எனவே, நீங்கள் சொல்லும் தீர்வு, சரிப்பட்டு வராது. இங்கு தான், ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு, 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறதே. ஜெ., அறிமுகம் செய்த அந்த திட்டத்தை நீங்கள் மறந்து விட்டீர்களா என்பதே என், 'டவுட்!'

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம் என்பது உண்மை; அதே நேரத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது என்பது மாயை. மக்களின் ஆதரவு, உண்மையிலேயே தங்களுக்கு கிடைத்துள்ளது என, ஆளும் தரப்பு நம்பினால், உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குவது ஏன்?

'டவுட்' தனபாலு: உங்களின் தோல்வி, உண்மை; அ.தி.மு.க.,வின் வெற்றி, மாயை என்கிறீர்களே... இது, என்ன தத்துவம் என்றே புரியவில்லை. தஞ்சாவூரில், திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்ததை, ஈ.வெ.ரா., சிலையை அவமரியாதை செய்து விட்டனர் என்றீர்களே, அது போலத் தான் இதுவுமா... கடந்த முறை, உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு போட மக்கள் தயாரான நிலையில், சுப்ரீம் கோர்ட் சென்று தடை பெற்று வந்தீர்களே... அதை மறந்து, தமிழக அரசு மீது குற்றம்சாட்டுகிறீர்களோ என்பதே என், 'டவுட்!'

***

'தி அயர்ன் லேடி' என்ற சினிமா பட பெண் இயக்குனர் பிரியதர்ஷினி:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் வாழ்க்கையை, சினிமாவாக எடுக்கிறேன். அவரைப் போலவே முகச்சாயல் கொண்ட நடிகை நித்யா மேனன், ஜெ., வேடத்தில் நடிக்கிறார். ஜெ., போலவே, நித்யாவுக்கும் பல மொழிகள் தெரியும். அவர் போலவே இவருக்கும், நிகர் இல்லா ஆளுமைத் தன்மை உள்ளது.

'டவுட்' தனபாலு: ஜெ., போன்ற ஆளுமைத்தன்மை கொண்டவர், நித்யா மேனன் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தப் படத்தை எப்போது தயாரித்து, எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் ஜெ., தோழி சசிகலாவாக நடிப்பது யார் என்ற, 'டவுட்'க்கு, முதலில் பதில் சொல்லுங்க... அது முக்கியம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\உங்களின் தோல்வி, உண்மை அ.தி.மு.க.,வின் வெற்றி, மாயை என்கிறீர்களே... இது, என்ன தத்துவம் என்றே புரியவில்லை..........\\ ஒரு படத்திலே கமலஹாசன் சொன்ன மாதிரி, இந்த மாதிரி சொல்றதையெல்லாம் கேட்டு அனுபவிக்கணும், ஆராயக்கூடாது .................

    • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

      புரியாத மாதிரி பேசுவதுதான் சுடலையின் கை வந்த கலை.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பாவம் ஸ்டாலின் , ‘மசமசப்பாக’ பார்த்து, தாடி இருப்பதால் பெரியாரோ என்று குழம்பிவிட்டார் போலும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement