Advertisement

'அமைச்சர் எவ்வளவு நாசுக்காக சொல்றாருப்பா!'

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேலுார் மாநகர அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான, கே.சி.வீரமணி, 'விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது, நம் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல். இதில், பெரிய பலத்துடன் வெற்றி பெற வேண்டும்; நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்; அவர் அந்த பகுதியில், நல்ல அறிமுகமானவராக இருக்க வேண்டும். குறிப்பாக, பொருளாதாரத்தில் உயர்ந்தவராக இருக்க வேண்டும்' என்றார்.

மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'வைட்டமின் ப இருப்போருக்கு தான், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, 'சீட்' தரப்படும் என்பதை, அமைச்சர் வீரமணி எவ்வளவு நாசுக்காக சொல்றாரு பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, தொண்டர்கள் கவலை முகத்தைக் காட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர் மட்டுமில்லை, எந்தக் கட்சியிலுமே வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே கேட்கும் முதல் கேள்வி ‘எவ்வளவு ‘செலவு’ செய்வீங்க?’ என்பதுதானே இதில் நாசுக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement