Advertisement

ஆளுங்கட்சி புள்ளி ஆசியுடன் சட்டவிரோத மது விற்பனை!

Share

''பணம் குடுத்தா, பத்தே நாள்ல பட்டா ரெடியாகிடும் பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க, இவ்வளவு வேகமா வேலை செய்றாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற ஒரு தாலுகா அலுவலகத்துல, எந்த வேலையா இருந்தாலும், பணம் இருந்தா தான் காரியம் ஆகும்... பட்டா மாறுதல், புது பட்டா கேட்டு, முறையான ஆவணங்களோட, பயனாளிகள், 'ஆன்லைன்' மூலமா விண்ணப்பிச்சாலும், 60 நாள்ல பட்டா குடுக்கிறதே இல்லை பா... ''சர்வேயர், தாசில்தார் கேட்கிற பணத்தை வெட்டிட்டா, பத்தே நாள்ல, பட்டா, வீடு தேடி வந்துடும்... ''பணம் தராம, வீம்பு செஞ்சா, பயனாளிகளை மாசக்கணக்குல அலையவிட்டு, கடைசியில ஏதாவது சின்ன குறையை கண்டுபிடிச்சு, மனுவை தள்ளுபடி பண்ணிடுறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''இவங்களை எல்லாம், திருத்தணி முருகன் தான் காப்பாத்தணும்...'' என, கன்னத்தில் போட்டுக் கொண்ட அண்ணாச்சியே, ''எவ்வளவோ போராடியும், அரசு இறங்கி வராததால, காலவரையற்ற வேலை நிறுத்தத்துல இறங்க போறாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார்.

''எந்தத் துறை ஊழியர்களைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தமிழகத்துல, கூட்டுறவுத் துறை சார்புல நடத்துற, 30 ஆயிரம் ரேஷன் கடைகள்ல, 40 ஆயிரம் பேர் வேலை பார்க்காவ... ''இவங்க, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை, பல வருஷங்களா வலியுறுத்திட்டு இருக்காவ வே... ''இதுக்காக பல போராட்டங்களையும் நடத்திட்டாவ... அப்ப எல்லாம், அதிகாரிகள் கூப்பிட்டு பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தர்றதா உறுதிமொழி குடுப்பாவ வே...

''ஆனா, இதுவரை எதுவும் நடக்கலை... முதல்வரை சந்திச்சு பேச, சங்க நிர்வாகிகள் எடுத்த முயற்சியும் பலன் அளிக்கலை... இதனால, வெறுத்து போன ஊழியர்கள், வர்ற, 17ம் தேதியில இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்துல ஈடுபட முடிவு பண்ணிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''சரக்கு விற்பனை சக்கை போடு போடுதுங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அந்தோணிசாமி.

''அதான், தீபாவளிக்கு, 450 கோடி ரூபாய்க்கு குடிச்சே தீர்த்திருக்காளே... நீர் எந்த ஊரைச் சொல்றீர் ஓய்...'' என, சலிப்புடன் கேட்டார், குப்பண்ணா.

''கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி, கோவில்பாளையம் ஒன்றியத்துல, நிறைய கல்லுாரிகள், ஐ.டி., நிறுவனங்கள் இருக்குது... இந்த ஒன்றியத்துல, மூணே மூணு டாஸ்மாக் கடைகள் தான் இருக்குங்க... ''ஆனா, 15க்கும் மேற்பட்ட இடங்கள்ல, சட்டவிரோதமா மது விற்பனை நடக்குது... இங்க, ஒரு மது பாட்டிலுக்கு, 30ல இருந்து, 50 ரூபாய் வரை, கூடுதலா வச்சு விக்கிறாங்க...

''இந்த சட்டவிரோத மது கடைகளை, பெரும்பாலும், இங்க இருக்கிற, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதியின் ஆதரவாளர்கள் தான் நடத்துறாங்க... அதனால, எந்த போலீசாரும், இந்தக் கடைகள் பக்கம், தலை வச்சுக் கூட படுக்க மாட்டேங்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனித்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • A R J U N - sennai ,இந்தியா

    இங்க, ஒரு மது பாட்டிலுக்கு, 30ல இருந்து, 50 ரூபாய் வரை, கூடுதலா வச்சு விக்கிறாங்க. இதுக்கு தனியா TASMAC என்று ஒரு "துறை" இல்லாமல் வெளிநாடுகளில்-AMERICA ஆஸ்திரஹீலியா போன்ற காடுகள் போல் எல்லா MALL களிலும் 18வயத்துக்கு மேற்பட்டோருக்கு PERMIT முறைப்படியே சிலவை சாதாரணமாகவோ கிடைக்கும்படி செய்யலாம்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ‘ஆஹா , டார்க்கெட்டையே மிஞ்சிவிட்டோம் என்றிருக்கையில் இப்படிக் குறுக்குசால் ஓட்டிய வகையில் நமக்கே போட்டிக்கடை போட்டுட்டாங்களே இதே மாதிரி எல்லா மாவட்டங்களும் கிளம்பிட்டா, டாஸ்மாக் எதுக்கு, கவர்மெண்ட் வருவாய் என்னாவது?’ முதல்வரின் மைண்ட் வாய்ஸ்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதல்வரின் கவனத்திற்கு : ஆஹா, டார்கெட்டை ரெகார்ட் பிரேக் செய்து விட்டோமென்றிருக்கையில் இந்த 'புழக்கடை பார்' தொகை கிடைக்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement