Advertisement

'கமிஷனர் எப்படி சமாளிக்கிறாரு பாருங்க!'

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வேலுார் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் மணிவண்ணன், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பொறியாளர் சீனிவாசன், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பங்கேற்றார்.

மாலை, 5:45 மணிக்கு, திடீரென மின்தடை ஏற்பட்டு, மீண்டும், 6:15 மணிக்கு தான் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், 30 நிமிடம், மொபைல் போன், 'லைட்' வெளிச்சத்திலேயே கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றோர், 'ஜெனரேட்டரை இயக்க வேண்டும்' என, கமிஷனரிடம் முறையிட்டனர். அதற்கு, 'ஜெனரேட்டரில், டீசல் இல்லை; அது பழுதாகியும் விட்டது; அதை சரி செய்ய நாளாகும்' எனக் கூறி அவர் சமாளித்தார்.

மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'ஸ்மார்ட் சிட்டியோட இப்போதைய நிலை, இப்படி தான் இருக்கும்னு, சொல்லாம சொல்றாரோ கமிஷனர்' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement