Advertisement

நாட்டுக்கு நாலு செய்தி

Share


சென்னை இளைஞர்கள் நடத்திய மொட்டைமாடிக்கூத்து
அது ஒரு மொட்டை மாடி
இயற்கை வெளிச்சத்திற்கு விடை கொடுத்து இருள் கவ்வும் வேளை

ஜமுக்காளம் பாய் பெட்ஷீட் என்று விரிக்கப்பட்ட தரைவிரிப்புகளில் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேலான மக்கள் தரையில் மேடையை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்

மேடை என்றால் அதுவும் மொட்டை மாடியின் தரைத்தளம்தான் கொஞ்சம் விளக்கு வெளிச்சமும் கீற்றுக்கொட்டகை பின்னனியும் மட்டும் கொஞ்சம் கூடுதல்.
இந்த சூழலின்தான் 35ற்கும் மேற்பட்ட இளஞைர்கள் மற்றும் இளைஞிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் தோன்றி நாங்கள் தியேட்டர்க்காரன் கலைக்குழு நாட்டுக்கு நாலு செய்தி சொல்ல வந்தோம் வந்தோம் ததிங்கிணத்தோம் வந்தோம் என்று பாடியபடி வந்தனர்
தொடர்ந்து அவர்கள் நான்கு குழுவினராகப் பிரிந்து நான்கு விதமான நாடகங்கள் போட்டனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு யார் காரணம் அரசு மட்டுமல்ல அதிக நேரம் ஷவர் பாத்தில் குளிக்கும் மக்களும் கூட ஒரு காரணம் என்பது போன்ற காரணங்களை அடுக்கும் ஒரு நாடகம்
எதிர்காலத்தில் அல்ல நிகழ்காலத்திலேயே சுவாசிக்க நல்ல காற்று கிடைக்காமல் அவதிப்படப் போகிறோம்( அதற்கு உதாரணம் தற்போது டில்லியில் நிலவும் சூழ்நிலை) ஆனாலும் நாம் திருந்துவதாக இல்லை குப்பைகளை எரிப்பதில் துவங்கி ஊருக்குள் தொழிற்சாலை நடத்துவது வரை நாம் இன்னும் திருந்தவில்லை என்று சொல்லும் ஒரு நாடகம்.
ஆபத்தில் விழுந்து கிடப்பவர்களை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படாது மேலும் அவர்களுக்கு நற்கருணைவீரன்(good samaritan) என்ற விருதும் ஐயாயிரம் ரூபாய் விருதும் வழங்கப்படும் இப்படி ஒரு சட்டம் வந்து பல ஆண்டுகளானாலும் இன்னமும் இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இருக்கின்றனரே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு நாடகம்
கடைசியாக வீட்டில் துவங்கி வேலை பார்க்கும் இடம் வரை இன்றும ்நிலவும் பாலியில் பாகுபாடு பிரச்னையை அலசும் நாடகம் என்ற நான்கு நாடகங்களை மேடையேற்றினர்.
கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரம் நடந்த நான்கு குறு நாடகங்களின் மூலமாக சொல்லப்பட்ட நல்ல நான்கு செய்திகளே நாட்டுக்கு நாலு செய்திகளாகும்.
தியேட்டர்க்காரன் குழுவின் சிறப்பே எவ்வளவு சீரியசான விஷயத்தையும் நகைச்சுவை கலந்து சொல்வதுதான். இந்த நான்கு நாடகங்களிலும் அந்த நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்பதால் சுவராசியத்திற்கும் குறைவில்லை.
நாடகத்தில் நடத்தவர்கள் பெரும்பாலும் புதியவர்கள் ஆனாலும் பாராடடும்படியான நடிப்பை வழங்கினர்.
குழுவின் தலைவரான சபரியிடம் பேசுகையில்,இதில் நடித்தவர்கள் அனைவருமே நல்ல காரியத்திற்காக பணம் வாங்காமல் நடிப்பபவர்கள்தான் இது போன்ற நல்ல விஷயத்தை சபாக்களில் நடத்தினால் இன்னும் நிறயை மக்களிடம் விஷயத்தை கொண்டு போய் சேர்க்க முடியும் ஆனாலும் சபாக்களில் நடத்தும் அளவிற்கு குழுவிற்கு பொருளாதார வசதி இல்லை யாராவது ஸ்பான்சர் செய்தால் நாங்கள் இலவசமாக நாடகத்தை நடத்தித்தரத் தயராக இருக்கிறோம் அதுவரை இது போன்ற தெரிந்தவர்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் நடத்தமுடியும் என்றார்.நாடகத்தை நடத்த ஸ்பான்சர் செய்ய விருப்பமுள்ளவர்கள் சபரியை தொடர்புகொள்ளவும் எண்:98849 66613.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Gopi - Chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement