Advertisement

'டவுட்' தனபாலு

Share

பத்திரிகை செய்தி: நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு, சேவையை அங்கீகரிக்கும் வகையில், கோவாவில் நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய அரசு சார்பில் அவருக்கு, சிறப்பு விருது வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

'டவுட்' தனபாலு: பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியின் ஊதுகுழலாக, நடிகர் ரஜினி விளங்குகிறார் என, தமிழக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள விருது, அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துமே. ரஜினிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடிகர் கமல், தமிழ் திரையுலகத்திற்கு சேவையாற்ற வந்து விட்டார். அவருக்கு, விருது அறிவிக்கப்படாதது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: சிறந்த கல்வியாளர்களை உருவாக்கும் உயரிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே உள்ளது. அதே வேளையில், ஆசிரியர்களின் சிறு இடர்பாடுகளையும், கோரிக்கைகளையும் அரசு முழுமையாக பரிசீலித்து, தேவையான நடவடிக்கை எடுக்கும்.

'டவுட்' தனபாலு: தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, ஒரு வாரமாக நடந்த, அரசு டாக்டர்கள் போராட்டம், முடிவுக்கு வந்து, மூன்று நாட்கள் தான் ஆகின்றன. ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகத் தான், இப்படி, 'ஐஸ்' வைத்து பேசுகிறீர்களோ என்பதே என், 'டவுட்!'

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்காக, தமிழக போலீசார் வழங்கும் ஒப்புகைச் சீட்டில், தமிழைக் காணவில்லை; ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் தான் உள்ளன. 'இரு மொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும்' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறியுள்ளார். அந்த இரு மொழிகள், இவை தானா; தமிழ் இல்லையா?

'டவுட்' தனபாலு: நீங்கள் மட்டும், உங்கள் பட நிறுவனத்தின் பெயரை, 'ரெட் ஜெயன்ட்' என்று, ஆங்கிலத்தில் வைத்துள்ளீர்களே... ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற உங்களின் முதல் படத்தை, 'ஓ.கே.ஓ.கே.,' என்று, ஆங்கில எழுத்துகளில் தானே விளம்பரம் செய்தீர்கள். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கலப்பில்லாமல் நீங்கள் பேசுவதில்லையே... பிறகு ஏன், ஆங்கிலம், ஹிந்தி மீது உங்களுக்கு இந்த கோபம் என்பது தான், என், 'டவுட்!'

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • karutthu - nainital,இந்தியா

    உதயநிதி ஸ்டாலின் ................???

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    அப்பனும் மகனும் ஊருக்குத்தான் உபதேசம் பண்ணுவாங்க நேற்றைக்கு அப்பா சொன்னதையே இன்று புள்ள திருப்பி சொல்லுது. நேற்றைக்கு அரசியல் வந்ததெல்லாம் வாய் கிழிய பேச ஆரம்பிச்சுடுதுங்க. மேல கேட்க பட்ட கேளிவிகளை எத்தனியோ முறை கேட்டுச்சு ஆனால் இன்று பதில் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement