Advertisement

'கட்சிகளை வரிசை கட்டி பொன்.ராதா திட்டுறாரே!'

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் அருகே தக்கலைக்கு வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம், 'அனைவரையும் போராட்டத்திற்கு துாண்டி, குளிர் காய்வது, தி.மு.க.வின் வழக்கம். அதே போல், அரசு டாக்டர்களையும் துாண்டி விட்டுள்ளது. தெய்வத்திற்கு நிகரான டாக்டர்கள், தங்கள் குறைகளை பேசி தீர்க்க வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்த, அரசும் தயங்க கூடாது.

'பா.ஜ.,வை, 'டுவிட்டரில்' குறை கூறும், அகில இந்திய பொதுச்செயலர் பிரியங்காவிற்கு, பட்டேல் குறித்த வரலாறு தெரியாது. காங்கிரசை கலைக்குமாறு கூறிய, காந்தியின் பேச்சை கேட்காத, காங்., தலைவர்கள், தற்போது, காந்தியின் கொள்கைக்கு முரணாக செயல்படுகின்றனர். அணு உலைக்கழிவு குறித்து பேசும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பொய் கூறுவதை நிறுத்த வேண்டும். அவர் விஞ்ஞானி அல்ல' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'முதல்ல, தி.மு.க.,வையும், இரண்டாவதாக, காங்கிரசையும், மூன்றாவதாக, ம.தி.மு.க.,வையும், 'மாஜி' மத்திய அமைச்சர் பொன்.ராதா திட்டுறாரே' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலையை குனிந்தபடி சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    விமரிசனம் தமாஷாகத்தான் இருக்கு ....ஆனால் உண்மையும் கலந்திருக்கிறதே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement