Advertisement

மரத்தில் மோதிய கார் டி.எஸ்.பி., காயம்

Share

ஸ்ரீவில்லிபுத்துார், :சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யாக பணியாற்றுபவர் சுப்பையா 52. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கூமாபட்டியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக காரில் வந்துள்ளார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர், மதுரை மாவட்ட எல்லையான கோபால்சாமி மலைகோயில் பகுதியில் வரும்போது, மரத்தில் கார் மோதியதில் டி.எஸ்.பி., சுப்பையாவும், அவரது மனைவியும் காயமடைந்தனர். தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் அவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement