Advertisement

இளையான்குடி அருகே இருதரப்பினர் மோதல்

Share

இளையான்குடி, -இளையான்குடி அருகே உள்ள குணப்பனேந்தலில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.இளமனுார் ஊராட்சிக்குட்பட்ட குணப்பனேந்தலை சேர்ந்த இரு பிரிவினரிடையே சில வருடங்களாக பிரச்னை நிலவிவருகிறது. நேற்று முன்தினம் இறந்தவரின் உடலை ஒரு தரப்பினர் ஊர்வலமாக எடுத்து வந்தபோது, வெடிவெடித்துள்ளனர். இதனால், இருபிரிவினரிடையே பிரச்னை எழுந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, இளமனுாரை சேர்ந்தவர்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் ஒரு தலைபட்சமாக பேசியதாக கூறி, இளமனுாரைச் சேர்ந்த சத்தியேந்திரன், பாண்டி ஆகியோரை மற்றொரு தரப்பினர்தாக்கியதில் காயமடைந்தனர்.ஆத்திரமடைந்த இளமனுார் பகுதியினர், குணப்பனேந்தல் ஊருக்குள் புகுந்து வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக, குணப்பனேந்தலைசேர்ந்த மைக்கேல்சாமி, சார்லஸ் ஆரோக்யசாமி, ஜேசுராஜ், அமல் ஆரோக்யசாமி, அருள் சந்தியாகு, ஸ்டீபன்சேகர் மற்றும் இளமனுாரைச்சேர்ந்த சத்தியேந்திரன், பாண்டி, தங்கத்துரை, சீனி, சந்துரு, கருமலைகந்தபாண்டி, மனோ ஆகியோர் மீது இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement