Advertisement

காங்கிரீட் விரிசலை தடுக்கும் வழி! 

சிமென்ட் கட்டடங்களில் நாள்பட விரிசல் ஏற்படுவதுண்டு. தண்ணீர், சிமென்ட், மணல் கலவை வேகமாக உலர்ந்துவிடும்போது விரிசல் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க, அடிக்கடி தண்ணீர் ஊற்றுவது ஒரு உத்தி.தண்ணீர் பஞ்சம் இருப்பதால், அடுக்கு மாடி கட்டடங்களில் இதை செயல்படுத்த முடிவதில்லை.

இதற்கு மாற்று வழி உண்டா? அமெரிக்காவிலுள்ள டிரெக்செல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அனல் மின் நிலையங்களில் வீணாகும் நிலக்கரி சாம்பலை வைத்து நுண் உருண்டைகளாக ஆக்கி, அவற்றை சிமென்ட் சுவரின் மீது பூசலாம் என கண்டறிந்துள்ளனர்.

நிலக்கரி சாம்பல் நுண் குளிகைகள், கடற்பஞ்சுபோல நேனோ இடைவெளிகளைக் கொண்டவை. இந்த இடைவெளியில், ஒரு குளிகை தன் எடையில் பாதியளவுக்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த பூச்சிலிருந்து, காங்கிரீட் சுவருக்கு மெல்ல மெல்ல நீர் பரவும் என்பதால், சுவர் விரிசல் அடைவதை தடுக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Krishnan G - Chennai,இந்தியா

    //ஒரு குளிகை தன் எடையில் பாதியளவுக்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டது//... இந்த குளிகைக்கும் தண்ணீர் ஊற்றினால்தானே எடையில் பாதியளவு உறிஞ்சிக்கொள்ளும். இப்ப உள்ள பிரச்சினையே தண்ணீர் பஞ்சம் தான். அதனால்தான் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டும்போது தண்ணீர் ஊற்றும் உத்தியை கடைபிடிக்க முடியவில்லை.

    • suresh kumar - Salmiyah,குவைத்

      //Krishnan G - Chennai,இந்தியா// இந்த குளிகை உறிஞ்சப்போகும் தண்ணீர், சுவற்றின் மேல் விழும் மழை தண்ணீர் ஆகும். கட்டும்போது ஊற்றும் தண்ணீர் அல்ல.

  • Nathan - Hyderabad,இந்தியா

    இந்த உருண்டை வியாபாரத்துக்கு வந்த சில நாட்களிலேயே போலி உருண்டைகள் கலந்து விற்றுவிடுவார்கள்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நல்ல செய்தி. நம் நாட்டில் உடனே நடைமுறை படுத்தினால் நல்லது.

  • Ranjithpriya - karur,இந்தியா

    கடுகாய் சுண்ணாம்பு போட்ட கலவையை நமது முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளார்கள் இதை இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளும் வரவேற்புகளுக்கு உரியதே. நமது அருகில் இருப்பதை எளிதில் கிடைப்பதும் தெரிந்து கொள்வது அவசியமானது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement