Advertisement

நடுகாட்டுப்பட்டி நமக்கு நடத்தியிருக்கும் பாடம்

Share


மனம் கனக்கிறது .............கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது .....
அன்னை மடியில் கண்ணுறங்க வேண்டிய செல்லம் சுஜித் .. மண்ணின் மடியில் உறங்க சென்றுவிட்டான்?

முகம் அறியாத அத்தனை பேரையும் அழவைத்து அனைவரது இதயத்திலும் இடம் பிடித்து சென்றுவிட்டான். அவன் மரணம் உரக்க சொன்ன ஒரு விஷயம் மதமோ, இனமோ, மொழியோ பெரிதல்ல மனிதமும், அன்பும்தான் பெரிதென்று.

யாருடைய தவறையும் சுட்டிக்காட்டி காயப்படுத்தும் நேரமில்லை குறிப்பாக பெற்றோருக்கு பெரும் ஆறுதலும் தேறுதலும் மனநல ஆலோசனையும் தேவைப்படும் நேரமிது.
அதே போல அரசையோ மீட்புப்பணியினரையோ கொஞ்சமும் குறைசொல்லமுடியாது முழு அர்பணிப்புடன் தன் சொந்த குழந்தையை காப்பாற்றும் துடிப்புடனும், தவிப்புடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மனிதம் உங்களால் வாழ்கிறது,சோர்வடையாது அடுத்த பணிக்கு உங்களை அர்பணித்து நகருங்கள்.
இனி அடுத்து அனைவரது கவனமும் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடுவதில்தான் இருக்கிறது.
தொண்டர்களே ரசிகர்களே பொதுமக்களே எங்கெல்லாம் ஆழ்துளை கிணறுகள் திறந்து இருக்கிறது என்பதை தேடிக்கண்டுபிடித்து சொல்லுங்கள் போர்க்கால வேகத்தில் மூடச்சொல்கிறோம் என்றெல்லாம் உணர்ச்சி வேகத்தில் உத்திரவுகளும் வேண்டுகோள்களும் பறக்கின்றன.
இந்த விஷயத்தை கொஞ்சம் அறிவுபூர்வமாக அணுகினால் நல்லது
இந்த ஆழ்துளை கிணறு போடுபவர்கள் மொத்த தமிழ்நாட்டிலும் முப்பது பேர்தான் இருப்பர் இவர்களுக்கு தெரியாமல் நகரத்திலோ கிராமத்திலோ துளைகள் போடமுடியாது.
இதுவரை போட்ட துளைகளுக்கும் இனி போடப்போகும் துளைகளுக்கும் இவர்களே பொறுப்பாளிகள்
இவர்களில் ஒருவரான மதுரை மாவட்ட போர்வெல் உரிமயைாளர்கள் சங்கத்தலைவரான பி.சுரேஷ் கூறுகையில்..
இது போல ஒரு சம்பவம் ஏற்கனவே 2014 ல் நடந்த போது போட்ட சட்டதிட்டங்களை அமுல்படுத்தியிருந்தாலே போதும் இப்போது இந்த சம்பவம் நடந்திருக்காது.
அரசாங்க உத்திரவு என்ன சொல்கிறது
துளை போடுவதற்கு முன்பாக கிணற்றின் வகை,ஆழம் மற்றும் அகலம் பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர் விவரம் ஆகியவை குறித்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் அதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பணி நடக்கும் இடத்தை சுற்றி முள்கம்பி வேலி அல்லது தடு்ப்பு வேலி அமைக்கப்பட வேண்டும்0.5x0.5x0.6 மீட்டர் அளவிலான சிமிட்டி அல்லது சிமிட்டிக் கலவைத்தளம் தரைமட்டத்தில் இருந்து 0.3 மீட்டர் உயரத்திற்கு மேல்புறமும் அமைக்கப்படவேண்டும்.
கிணற்றின் மேற்புரத்தை இரும்பு தகடுகளால் மூடவேண்டும் அது எளிதில் திறக்கமுடியாதபடி திருகுகள் கொண்டு சுற்றிலும் மூடப்பட்டிருக்கவேண்டும்.
இது போக எங்கே துளை போட்டாலும் தண்ணீர் வராதபோதுதான் பிரச்னை, ‛ அவுட்டர் ரிங் பைப்' என்று ஒன்று போட்டு இருப்போம் இது தரையில் இருந்து ஒரு அடி மேலாக மூடிபோட்டு நிற்கும் இதன் மதிப்பு மூவாயிரம் ரூபாய் வரையாகும் ஏற்கனவே முப்பதாயிரம் செலவழித்து தண்ணீர் வரவில்லை இதுக்கு இன்னும் மூவாயிரம் கூடுதலாக தண்டம் வேறேயா? என்று துளை போட்ட சம்பந்தப்பட்ட பயனாளி அதை கழட்டி விற்றுவிடுவார் குழி திறந்த குழியாகிவிடும் அதனால்தான் குழந்தை விழுந்துவிடுகிறது.
ஏற்கனவே தண்ணீர் தராத ஆழ்துளை கிணறுகளை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு மூடிவிட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்திரவே இருக்கிறது அது எட்டாயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் அதையும் செய்வதில்லை, நாங்கள் போட்டுத்தரும் 3 ஆயிரம் ரூபாய் பைப்பையும் பிடுங்கிவிற்றுவிடுவர், ஏதாவது இ்ப்படி நடக்கும் போதுதான் அலறுவர்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை வெறும் 250 ரூபாய் செலவில் இரும்பு மூடி ஒன்று உள்ளது எங்கெங்கு துளைகள் இருக்கிறது என்று எங்கள் ஆட்களுக்கு தெரியும் குழிக்கு 250 ரூபாய் செலவழித்தால் போதும் திறந்துகிடக்கும் குழிகள் அனைத்தையும் எங்கள் உதவியோடு ஒரு சில நாளில் மூடிவிடலாம் நாங்கள் தயார் எங்களை பயன்படுத்திக் கொள்ள யார் தயார்?தொடர்புக்கு பி.சுரேஷ் எண்:9442586599.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    எல்லா வகையிலும் விதி மீறிய அந்த தகப்பன் தானே கொலைகாரன் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement