Advertisement

சூறாவளியால் 200 ஏக்கர் முந்திரி மரங்கள் நாசம்

Share

பெண்ணாடம்:சூறாவளியால், 200 ஏக்கர் பரப்பிலான முந்திரி மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி, பெலாந்துறை, பாசிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில், 500 ஏக்கருக்கு மேல், முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வறட்சி, பனிப்பொழிவு உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால், கடந்த ஆண்டுகளில், குறைந்த மகசூல் கிடைத்தது.சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். 'நடப்பு பருவத்தில், அதிக மகசூல் கிடைக்கும்' என, நம்பினர்.ஆனால், நேற்று முன்தினம் மாலை, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் பெலாந்துறை, பாசிக்குளம் கிராமங்களில் இருந்த, முந்திரி மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்தன. சில மரங்கள், வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெலாந்துறை, பாசிக்குளம் கிராமங்களில் வீசிய பலத்த காற்றுக்கு, முந்திரி வயல்களின் இடையில், ஊடுபயிராக வளர்க்கப்பட்ட தேக்கு, பலா மற்றும் மா மரங்களும், வேரோடு விழுந்தும், கிளைகள் முறிந்தும் நாசமாகின.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement