Advertisement

தீபாவளி பரிசுக்கு நன்றிங்கண்ணா!

Share

கையில் கேமிராவையும், இதயத்தில் இரக்கத்தையும் எப்போதும் சுமக்கும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் தங்கள் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளிக்கு புத்தாடை வழங்கி அவர்களை மகிழ்சிப்படுத்தி உள்ளனர்.


சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து வருடா வருடம் தீபாவளி பண்டிகையன்று ஏதேனும் ஒரு நலிவடைந்த அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளி பரிசாக ஆடைகள் வழங்குவது வழக்கம்.

எட்டாவது வருடமாக இந்த வருடம் திருவள்ளுவர் மாவட்டம் எர்ணாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவியர் 170 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளும் எழுது பொருட்களும் பள்ளிக்கான மின்விசிறி மற்றும் வாட்டர் டேங்கும் வாங்கி்க்கொடுத்துள்ளனர்.
இதற்காக நடந்த விழாவில் வருவாய்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி ,104 வயது பெரியவர் பார்த்தசாரதி,புகைபபடக்கலைஞர் யோகா,பாரதி தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவினை சம்பத்குமாரும்,சிதம்பரமும் ஒருங்கிணைத்திருந்தனர்.
பரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட மாணவிகள் சார்பாக பேசிய அருணாதேவி,இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எங்கள் பள்ளியை தேடிக்கண்டுபிடித்து தீபாவளி பரிசு கொடுத்ததுடன் எங்கள் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளீர்கள் மேலும் சிற்றுண்டியும் கொடுத்து மகிழ்வித்து இருக்கிறீர்கள் வாழ்க்கையில் உங்கள் அனைவரையும் மறக்கமாட்டோம் மிகவும் நன்றி அண்ணா என்றார் நெகிழ்ச்சியோடும் அவருக்கு நெகிழ்ச்சிக்கு காரணமான அண்ணன்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement